Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Year Ender: 2025ம் ஆண்டில் உருவாகும் என அறிவிக்கப்பட்டு பின் கைவிடப்பட்ட படங்கள் என்னென்ன?

Abandoned Movie In 2025 : தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் பிரபல நடிகர்களின் நடிப்பில் பல்வேறு படங்ககள் உருவாகிவருகின்றன. அந்த வகையில் இந்த 2025ம் ஆண்டில் உருவாகும் என அறிவிக்கப்பட்டு பின் கைவிடப்பட்ட பிரபல நடிகர்களின் தமிழ் படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Year Ender: 2025ம் ஆண்டில் உருவாகும் என அறிவிக்கப்பட்டு பின் கைவிடப்பட்ட படங்கள் என்னென்ன?
2025 ஆம் ஆண்டில் கைவிடப்பட்ட தமிழ் திரைப்படங்கள்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 14 Dec 2025 22:36 PM IST

STR 49 திரைப்படம் (STR49 Movie): நடிகர் சிலம்பரசனின் (Silambarasan) நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் மேலும் பல புது படங்களில் ஒப்பந்தமாகியும் வருகிறார். இந்நிலையில் இவரின் நடிப்பில் இந்த 2025ம் ஆண்டில் உருவாகும் என அறிவிக்கப்பட்டிருந்த திரைப்படம்தான் STR49. இப்படத்தை தேசிய விருது வென்ற இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் (Ramkumar Balakrishnan) இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் சிலம்பரசன், சந்தானம், கயாடு லோஹர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடிக்கவிருந்தனர். மேலும் இந்த படத்தை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் (Akash Bhaskaran) தயாரிக்கவிருந்த நிலையில், சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசையமைப்பதாக கூறப்பட்டிருந்தது.

இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் தொடங்கிய நிலையில், சில காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தற்போது இந்த படம் எந்த நிலையில் உள்ளது என்பது தொடர்பான அப்டேட் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஹே நமக்கான காலம்’… பராசக்தி படத்திலிருந்து வெளியானது 3வது பாடல்!

வாடிவாசல் திரைப்படம் (Vaadivaasal) :

நடிகர் சூர்யா மற்றும் வெற்றிமாறனின் கூட்டணியில் உருவாகுவதாக அறிவிக்கப்பட்டிருந்த திரைப்படம் வாடிவாசல். இந்த திரைப்படத்தில் சூர்யா அதிரடி ஜல்லிக்கட்டு வீரனாக நடிக்கவிருந்தார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் கடந்த 2021ம் ஆண்டிலே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விடுதலை பார்ட் 2 படத்தை முடித்த கையேடு இடத் இயக்குவதாக வெற்றிமாறன் கூறியிருந்தார். இப்படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், ஷூட்டிங்கிற்கு தயாராகிவந்தது. பின் இயக்குநர் மற்றும் சூர்யாவுக்கும் கதை தொடர்பாக  முரண் எழுந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த படம் கைவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கைதி 2 திரைப்படம் (Kaithi 2) :

நடிகர் கார்த்தியின் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான படம்தான் கைதி. இந்த படத்தின் மூலமாகத்தான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தமிழ் மக்களிடையே பிரபலமானார். இதை அடுத்ததாக தமிழில் தளபதி விஜய், கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்களுடன் படம் இயக்க தொடங்கினார். மேலும் கைதி படத்தின் தொடர்ச்சியாக கைதி 2 படம் உருவாவதாக லோகேஷ் கனகராஜ் கூலி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தஹார்.மேலும் இவர் டிசி என்ற படத்தில் ஹீரோவாக நடித்துவரும் நிலையில், இந்த படத்தை முடித்தவுடன் கைதி 2 படத்தை இயக்குவதாக தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: ஜன நாயகன் படத்தின் வெளிநாடு ப்ரீ-புக்கிங் நிறுத்தம்.. ரிலீஸ் தேதி தள்ளிபோகிறதா?

இந்நிலையில் இணையத்தில் வைரலாகிவரும் தகவல்கள் குறித்து பாரத்தால், லோகேஷ் கனகராஜ் அல்லு அர்ஜுனை வைத்து தெலுங்கு படத்தில் விரைவில் இணைவதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர் கார்த்தியும் கைதி 2 படத்தின் நிலை என்னவென்று தெரியவில்லை என சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கைதி 2 படம் குறித்து நடிகர் கார்த்தி பேசிய வீடியோ பதிவு :

தனி ஒருவன் 2 திரைப்படம் (Thani Oruvan 2):

நடிகர் ரவி மோகன் நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டில் வெளியான படம்தான் தனி ஒருவன். இந்த் படத்தை ரவி மோகனின் சகோதரர் மோகன் ராஜா இயக்கியிருந்தார்.. இதில் ரவி மோகன், நயன்தாரா, அரவிந்த் சுவாமி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தின் வெற்றியை சுமார் 10 வருடத்திற்கு பின் இப்படத்தின் பாகம் 2 உருவாகவுள்ளதாக தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் மோகன் ராஜாவும் தெரிவித்திருந்தார். பின் இப்படத்தின் பட்ஜெட் மிகவும் பிரம்மாண்டமாக அமைந்தத இப்படத்தின் உருவாக்கத்தை தள்ளிவைத்திருப்பதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்திருந்தார். இப்படம் வரும் 2026ம் ஆண்டில் உருவாக வாய்புக்கள் உள்ளது என கூறப்படுகிறது.