Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Kayadu Lohar: சிலம்பரசனின் STR49 படத்தின் நிலை என்ன?- உண்மையை உடைத்த கயாடு லோஹர்!

Kayadu Lohar About STR49 Movie Shooting: தென்னிந்திய சினிமாவில் வளர்ந்துவரும் இளம் நடிகைகளில் ஒருவர்தான் கயாடு லோஹர். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துவருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், சிலம்பரசனுடனான STR49 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என தெரிவித்துள்ளார்.

Kayadu Lohar: சிலம்பரசனின் STR49 படத்தின் நிலை என்ன?-  உண்மையை உடைத்த கயாடு லோஹர்!
சிலம்பரசன் மற்றும் கயாடு லோஹர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 16 Nov 2025 22:18 PM IST

கோலிவுட் மக்கள் மத்தியில் டிராகன் (Dragon) படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகைதான் கயாடு லோஹர் (Kayadu Lohar). இவருக்கு தமிழில் முதல் படமாக இருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் இவரின் நடிப்பு வரவேற்கப்பட்டிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக இவருக்கு தொடர்ந்து புதிய படங்களின் வாய்ப்புகள் குவிந்திருந்தது என்றே கூறலாம். அந்த வகையில் இப்படத்தை அடுத்ததாக இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் படங்களில் தொடர்ந்து நடிக்க தொடங்கினார். இவரின் நடிப்பில் தமிழில் கிட்டத்தட்ட 3 படங்கள் உருவாகிவருகிறது. இவர் டான் பிக்ச்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனத்தின் தயாரிப்பின் கீழ் 2 படங்ககளில் ஒப்பந்தமாகியுள்ளார். அதில் ஒன்று அதர்வாவுடன் (Athrvaa) இதயம் முரளி (Idhayam Murali) என்ற படமும், மற்றொன்று சிலம்பரசனுடன் (Silambarasan) STR49 என்ற திரைப்படம்தான். இதில் இதயம் முரளி படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், விரைவில் வெளியீட்டிற்கு தயாராகும் என கூறப்படுகிறது.

STR49 படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் (Ramkumar Balakrishnan) இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தற்போது இப்படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருக்கும் நிலையில், இந்த படத்தின் தற்போதைய நிலை குறித்து நடிகை கயாடு லோஹர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ‘பிக் ஃபேன் ப்ரோ’.. க்யூட் ரசிகர்களை சந்தித்த சிலம்பரசன்- வைரலாகும் வீடியோ!

சிலம்பரசனின் STR49 திரைப்படம் குறித்து பேசிய கயாடு லோஹர்

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய கயாடு லோஹர் STR49 படத்தைப் பற்றி அப்டேட் தெரிவித்துள்ளார். அதில் தொகுப்பாளர் நடிகை கயாடு லோஹரிடம் STR49 படம் பற்றி கேள்வி கேட்டிருந்தார்.அதற்கு பதிலளித்த கயாடு லோஹர், “எங்களின் STR49 படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை. எனக்கு தெரிந்து அடுத்த வருடம் (2026) தொடங்கும் என நினைக்கிறேன். இயக்குநரும் மற்றும் தயாரிப்பாளரும் அந்த படத்திற்கான வேலையில் தீவிரமாக இருந்துவருகிறார்.

இதையும் படிங்க: கார்த்தியின் மார்ஷல் படத்தின் கதைக்களம் இதுதான்… அப்டேட் கொடுத்த சாய் அபயங்கர்!

மேலும் நானும் சிலம்பரசன் சாருடன் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன். ஏற்கனவே ஒரு படத்தில் அவருடன் நடிக்கவிருந்தது அனைவருக்கும் தெரியும். மேலும் மீண்டும் அவருடன் ஒரு படத்தில் இணைந்து நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்கள் இருவரின் கெமிஸ்ட்ரி நிச்சயமாக இந்த படத்தில் அருமையாக அமையும்” என்று அதில் அவர் ஓபனாக பேசியுள்ளார்.

சிலம்பரசனின் STR49 திரைப்படம் குறித்து நடிகை கயாடு லோஹர் பேசிய வீடியோ பதிவு :

நடிகை கயாடு லோஹர், இதயம் முரளி, இம்மோர்டல் மற்றும் சிலம்பரசனின் STR49 போன்ற தமிழ் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் தெலுங்கில் ஒரு படம் மற்றும் மலையாளத்தில் நடிகர் டோவினோ தாமஸுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.