Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

காந்தா படத்துக்கு பிறகு துல்கர் சல்மான் நடித்துவரும் படம் இதுதான்.. அவரே சொன்ன விஷயம்!

Dulquer Salmaan Next Movie: தென்னிந்திய சினிமாவில் பிரபல நாயகனாக இருந்துவருபவர் துல்கர் சல்மான். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் காந்தா. இந்த படமானது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாசிடிவ் விமர்சனங்களை பெற்றுவருகிறது. இந்நிலையில் இந்த படத்தை அடுத்ததாக இவரின் நடிப்பில் உருவாகிவரும் படம் என்ன என்பது பற்றி அவரே தெரிவித்துள்ளார்.

காந்தா படத்துக்கு பிறகு துல்கர் சல்மான் நடித்துவரும் படம் இதுதான்.. அவரே சொன்ன விஷயம்!
துல்கர் சல்மான் அடுத்த படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 15 Nov 2025 20:44 PM IST

மலையாள சினிமாவின் மூலம் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan). இவர் நடிகர் மம்மூட்டியின் (Mammootty) மகன் ஆவார். இவரும் தனது தந்தையை போல பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் சமீபத்தில் வெளியான திரைப்படம்தான் காந்தா (Kaantha). இந்த படத்தை துல்கர் சல்மான் மற்றும் ராணா டகுபதி (Rana Daggubati) இணைந்து தயாரித்திருந்தார். இந்த படத்தை இயக்குநர் செல்வமணி செல்வராஜ் (Selvamani Selvaraj)இயக்கியிருந்தார். இந்த படம் கடந்த 1960ம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நடந்த விஷயங்கள் தொடர்பான கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் துல்கர் சல்மான் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் (Bhagyashri Borse) நடித்திருந்தார்.

நடிகை பாக்யஸ்ரீ போர்ஸிற்கு தமிழ் சினிமாவில் இதன் முதல் படம் என்றாலும், ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றுவருகிறார். இந்த படத்திற்கு பின் நடிகர் துல்கர் சல்மான் எந்த படத்தில் நடித்துவருகிறார் என ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்த நிலையில், அதற்கு அவரே பதிலளித்துள்ளார்.

இதையும் படிங்க: ஒரே பொண்ணு பொண்ணு.. வாட்டர்மெலான் ஸ்டார் காதல் தொல்லை… பிக்பாஸ் வீட்டில் அரோரா வைத்த கோரிக்கை!

நடிகர் துல்கர் சல்மானின் புதிய திரைப்படம் :

காந்தா படத்திற்கு பின் நடிகர் துல்கர் சல்மான் கிட்டத்தட்ட 2 படங்களுக்கும் மேல் ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்கிலில் DQ41 படத்திலும், மலையாளத்தில் ஐஆம் கேம் (Im Game)என்ற படத்திலும் நடிக்கவுள்ளார். இதில் தற்போது அவர் முழுவதுமாக ஐ ஆம் கேம் படத்தின் ஷூட்டிங்கில் அவர் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இப்படமானது வலுவான கமர்ஷியல் கதைக்களத்தில் மற்றும் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகிவருகிறதாம். இந்த படத்தய் ஆர்.டி.எக்ஸ் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கிவருகிறாராம். மேலும் சுமார் 2 ஆண்டுகளுக்கு பின் மலையாளத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் படமாகவும் இது அமைந்துள்ளது.

இதையும் படிங்க: விமர்சனங்கள் வந்தாலும் அவர் அதையே தேர்வுசெய்கிறார்… நானாக இருந்தால்- ராஷ்மிகாவை பாராட்டிய விஜய் தேவரகொண்டா!

இந்த படத்தின் ஷூட்டிங் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், வரும் 2026ம் ஆண்டு கோடை காலத்தில் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் 2 வருடங்களுக்கு பின் துல்கர் சல்மானுக்கு ஐ ஆம் கேம் படமானது இந்தப் படம் கேரளாவில் மிகப்பெரிய ஓபனிங்கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காந்தா திரைப்படத்தின் ட்ரெய்லர் குறித்து துல்கர் சல்மான் வெளியிட்ட பதிவு :

இந்த காந்தா படமானது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி படமாக வெளியாகியிருக்கும் நிலையில், மக்களிடையே பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. மேலும் இந்த படத்தின் மூலம் துல்கர் சல்மானின் புகழ் உலகமெங்கும் பரவும் என எதிர்பார்க்கப்படுகிறது.