Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நெபோட்டிசம் குறித்து வெளிப்படையாக பேசிய துல்கர் சல்மான் – வைரலாகும் வீடியோ

Actor Dulquer Salmaan: இந்திய சினிமாவில் நெப்போடிசம் குறித்து பல கருத்துகள் நிலவி வருகின்றது. வாரிசுகளாக பலர் உள்ளே வருவதால் எந்தவித பின்புலனும் இல்லாமல் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் சிரமம் நிழவுதாக தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

நெபோட்டிசம் குறித்து வெளிப்படையாக பேசிய துல்கர் சல்மான் – வைரலாகும் வீடியோ
துல்கர் சல்மான்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Nov 2025 20:04 PM IST

நெப்போடிசம் என்பது அனைத்து துறைகளில் இருந்தாலும் சினிமா துறையில் இதுகுறித்த விவாதங்கள் அதிக அளவில் பேசப்பட்டு வருகின்றது. சினிமாவில் எந்தவிதமான பின்புலனும் இல்லாமல் சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் பலருக்கு இந்த நெப்போடிசம் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் தொடர்ந்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். நெப்போடிசம் என்றால் என்னவென்றால் சினிமாவில் தங்களது தந்தை அல்லது தாய் முன்னதாகவே பிரபலமாக இருக்கும் பட்சத்தில் அவர்களின் பிரபலத்தை பயன்படுத்தி அவர்களின் வாரிசுகள் மிகவும் எளிதாக வாய்ப்புகளை பெருகிறார்கள். இது நடிப்பு துறையில் மட்டும் இன்றி சினிமாவில் இசை, இயக்கம், தயாரிப்பு என அனைத்து துறைகளிலும் நடைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று புதிதாக வருவபர்களுக்கு திறமை இருந்தும் தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி இந்த நெப்போடிசத்தால் இந்திய சினிமாவில் பலர் நுழைந்துள்ளனர். குறிப்பாக பான் இந்திய அளவில் உள்ள நடிகர்கள் பலர் நெப்போ கிட்களாகவே உள்ளனர். இதுகுறித்து நெப்போ கிட்ஸ்களாக இருப்பவர்களே பல இடங்களில் வெளிப்படையாக தொடர்ந்து பேசி வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகர் துல்கர் சல்மான் தான் ஒரு நெப்போ கிட்டாக இருப்பது குறித்து வெளிப்படையாக பேட்டி ஒன்றில் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நெப்போ கிட்டாக இருப்பது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது:

அதன்படி அந்த பேட்டியில் நெப்போ கிட்டாக இருப்பது சாதகமா அல்லது பாதகமா என்று துல்கர் சல்மானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய நடிகர் துல்கர் சல்மான், ஒரு நேப்போ குழந்தையாக இருப்பது ஒரு பாக்கியம். அதை ஒரு பாதகம் என்று சொல்ல முடியாது. சில நேரங்களில் நாம் இலக்கு வைக்கப்பட்டதாக உணர்கிறோம். ஆனால் புகழைப் பெறும் எந்தவொரு நபரும் இலக்கு வைக்கப்படுவதை எதிர்கொள்கிறார்கள் என்று தெரிவித்து இருந்தார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற லெனின் பாண்டியன் படக்குழு

இணையத்தில் கவனம் பெறும் துல்கர் சல்மானின் பேச்சு:

Also Read… காந்தா படத்திற்கு வந்த புதிய சிக்கல்… தடை செய்யக்கோரி வழக்கு