Mamitha Baiju: ‘அந்த விஷயத்தில் விஜய் சாரை அடிச்சிக்கமுடியாது’ – மேடையில் வெளிப்படையாக பேசிய மமிதா பைஜூ!
Mamitha Baiju About Punctuality And Qualities: தென்னிந்திய சினிமாவில் இளம் கதாநாயகியாக கலக்கிவருபவர் மமிதா பைஜூ. இவர் சமீபத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிலையில், அதில் தளபதி விஜய் குறித்து மேடையில் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். மேலும் அவரின் குவாலிட்டியான செயல்கள் குறித்தும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.
தமிழில் தற்போது இளம் நடிகையாக தொடர்ந்து, அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகிவருபவர் மமிதா பைஜூ (Mamitha Baju). இவர் மலையாளம் சினிமாவின் மூலம் கதாநாயகியாக நுழைந்த நிலையில், தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிப் படங்களில் கதாநாயகியாக நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக டியூட் (Dude) என்ற திரைப்படமானது வெளியானது. கடந்த 2025ம் ஆண்டில் வெளியான இப்படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு (Pradeep Ranganathan) ஜோடியாக நடித்து அசத்தியிருந்தாரா. இந்த படத்தில் இவருக்கு சிறப்பான வரவேற்பு இருந்த நிலையில், இதற்கு முன்னே தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) ஜன நாயகன் (Jana Nayagan) திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார். இப்படத்தில் தளபதி விஜய்யின் மகளாக நடிகை மமிதா பைஜூ நடித்துள்ளார்.
இப்படமானது சென்சார் பிரச்சனையின் காரணமாக இன்னும் ரிலீஸ் செய்யப்படாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விதத்தில் சமீபத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த மமிதா பைஜூ, தளபதி விஜய்யின் தரமான குணங்கள் மற்றும் அவருக்கு பிடித்த உணவு குறித்தும் ஓபனாக தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: சூர்யா 46 படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்… நெகிழ்ந்து பேசிய மமிதா பைஜூ
தளபதி விஜய் குறித்து மமிதா பைஜூ பேசிய விஷயம் :
அந்த நிகழ்ச்சியின் மேடையில் பேசிய மமிதா பைஜூ, விஜய், சூர்யா, தனுஷ் மற்றும் நிவின் பாலி குறித்து பகிர்ந்திருந்தார். அப்போது தளபதி விஜய் குறித்து பேசிய மமிதா பைஜூ, “விஜய் சார் பற்றி பேசவேண்டும் என்றால், அவர் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு நேரம் தவறாமல் வந்துவிடுவார், ரொம்ப ஸ்வீட். நம்ம எதாவது ஒரு சிறிய விஷயம் சொன்னால் கூட அதை நியாபகம் வைத்திருப்பார். அதை ரெண்டு மாசம் கழிச்சி கேட்டாலும் அவர் தெளிவாக சொல்லுவார். ஆனால் நான் 2 நாட்களுக்கு பிறகு கேட்டாலும் மறந்துவிடுவேன்.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் சேயோன் ரிலீஸ் தேதி எப்போது இருக்கும்? பொங்கலில் விட்டதை இப்படத்தின் மூலம் பிடிப்பாரா?
அது அவரிடம் மிகவும் குவாலிட்டியான விஷயமாக எனக்கு தெரிஞ்சிது. மேலும் அவருக்கு பிடித்த உணவு எனக்கு என்னனு தெரியும். அவர் எப்போதுமே மத்திய உணவிற்கு சால்மன் மீன் சாப்பிடுவாங்க. அதனால் நான் சாரிடம் எப்போது பார்க்கும்போதும், “சால்மன் சாப்டியா சார்”-னு கேட்பேன். அதற்கும் விஜய் சாரும்,”ஹாம் சாப்டேன் மா”-னு பதில் சொல்வாரு. அவருடன் பல நினைவுகள் இருக்கிறது” என அதில் தெரிவித்திருந்தார்.
விஜய் குறித்து நடிகை மமிதா பைஜூ பேசிய வீடியோ பதிவு :
“@actorvijay sir is very punctual & sweet♥️. If I even tell him a small thing, he used to remember even after 2 months, which i used to forget😅. Salmon fish was his favourite dish. I ask ‘Salmon Saptiya sir’. He replies ‘Haan Sapten ma😁”
– #MamithaBaijupic.twitter.com/VC6rMDB5ZG— AmuthaBharathi (@CinemaWithAB) February 17, 2026
தளபதி விஜய், மமிதா பைஜூ மற்றும் பூஜா ஹெக்டே கூட்டணியில் தயாரான ஜன நாயகன் திரைப்படமானது தற்போது, மறு ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் இப்படம் மறுஆய்வு செய்யப்பட்டு சென்சார் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வெளிநாட்டு விநியோக நிறுவனம் ஒன்று, ஜன நாயகன் 2026ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதிக்கு முன் வெளியாகாது என்றும் அறிவித்துள்ளது. அப்படிப்பார்த்தால், 2026ம் ஆண்டு தேர்தலுக்கு பின் ஜன நாயகன் படம் வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.