விஜய் சேதுபதி – தியாகராஜன் குமாரராஜா புது பட டைட்டில் இதுதான்… வைரலாகும் அப்டேட்
Vijay Sethupathi and Thiagarajan Kumararaja Movie: தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் அடுத்ததாக இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடிக்க உள்ள நிலையில் படத்தின் தலைப்பு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நடிகர் விஜய் சேதுபதி அதனைத் தொடர்ந்து நாயகனாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து சினிமாவில் நாயகனாக மட்டுமே நடிப்பேன் என்று எந்த கொள்கையும் இல்லாமல் வில்லன் சிறப்பு கதாப்பாத்திரத்திலும் தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. தொடர்ந்து இவர் எந்த கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்தாலும் இவரது படத்தை ரசிகர்கள் கொண்டாடத் தவறியதில்லை. இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து மூன்று படங்கள் வெளியானது. இதில் துடரும் என்ற மலையாள படத்தில் கேமியோ வேடத்தில் நடித்து இருந்த நிலையில் ஏஸ் மற்றும் தலைவன் தலைவி என இரண்டு தமிழ் படட்ங்களில் நாயகனாக நடித்து இருந்தார். இந்த இரண்டு படங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து இந்த 2026-ம் ஆண்டு தொடக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் காந்தி டால்க்ஸ் படம் திரையரங்குகளில் வெளியானது. வசனமே இல்லாமல் இருந்த இந்தப் படம் மக்களிடையே கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்கள் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.




விஜய் சேதுபதியின் அடுத்தப் பட டைட்டில் பாக்கெட் நாவல்:
இந்த நிலையில் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா உடன் நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் கூட்டணி வைப்பதாக அறிவிப்பு வெளியானது. முன்னதாக இவர்களின் கூட்டணியில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைவது மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் விஜய் சேதுபதி மற்றும் தியாகராஜன் குமாரராஜா கூட்டணியில் உருவாகும் படத்திற்கு பாக்கெட் நாவல் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… AR Rahman: 40 நாட்கள் விலகி இருக்கப்போகிறேன்.. ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ் சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான்!
லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Very very proud and super happy to present the First Look of Thiagarajan Kumararaja’s #POCKETNOVEL ❤️❤️❤️❤️
Shoot Begins!@ilaiyaraaja #ThiagarajanKumararaja @VijaySethuOffl @MalavikaM_ @RajbShettyOMK #ActorKishore @dhilipaction @tylerdurdenand1 #NiravShah @andrewxvasanth… pic.twitter.com/656q3ts6er
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) February 16, 2026