Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரவி தேஜாவிற்கு ஜோடியாக நடிக்கும் பிரியா பவானி சங்கர்… வெளியானது கேரக்டர் போஸ்டர்

Actress Priya Bhavani Shankar: தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தொடங்கி தற்போது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகியாக வலம் வருகிறார் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் தற்போது நடித்துள்ள படத்தி இருந்து அவரது கதாப்பாத்திர போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

ரவி தேஜாவிற்கு ஜோடியாக நடிக்கும் பிரியா பவானி சங்கர்… வெளியானது கேரக்டர் போஸ்டர்
இருமுடிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 15 Feb 2026 13:16 PM IST

தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தனது பணியைத் தொடங்கியவர் பிரியா பவானி சங்கர். இவர் செய்தி வாசிப்பாளராக இருக்கும் போது மக்களிடையே பிரபலம் ஆனார். அதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நாயகியாக அறிமுகம் ஆனார். இந்த சீரியலில் இவர் நடித்த கதாப்பாத்திரம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் நாயகியாக நடிக்கத் தொடங்கினார். அதன்படி கடந்த 2017-ம் ஆண்டு இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான மேயாத மான் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆனார் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான மான்ஸ்டர், ஓ மனப்பெண்ணே, யானை, பத்து தல, டிமாண்டிக் காலனி என பலப் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்தப் படங்களில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர் தெலுங்கு சினிமாவிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் போஸ்டர் வெளியாகி வருகின்றது.

ரவி தேஜாவிற்கு ஜோடியாக நடிக்கும் பிரியா பவானி சங்கர்:

அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குனர் சிவ நிர்வாணா. இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள இருமுடி படத்தில் நடிகர் ரவி தேஜா நாயகனாக நடித்துள்ளார். மேலும் நடிகை பிரியா பவானி சங்கர் இந்த இருமுடி படத்தில் நடிகை பிரியா பவானி சங்கரின் கதாப்பாத்திரத்திற்கு காவேரி என்று பெயர் வைத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… My Lord Movie: மை லார்ட் படக்குழுவை நேரில் சந்தித்த சூர்யா – வைரலாகும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் இருமுடி பட போஸ்டர்:

Also Read… கோச்சடையான் வெளியான பிறகு பல விமர்சனங்களை எதிர்கொண்டேன் – சௌந்தர்யா ரஜினிகாந்த்