AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Mari Selvaraj: முதல் முறையாக அதை முயற்சிக்கிறேன்.. டி55 பட கதை இதுதான் – மாரி செல்வராஜ் பேச்சு!

Mari Selvaraj About D56 Movie Plot: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் மாரி செல்வராஜ். இவரின் இயக்கத்தில் தனுஷ் முதல் துருவ் விக்ரம் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். அந்த விதத்தில் இவர் தற்போது டி56 படத்தின் பணிகளில் இருக்கும் நிலையில், அப்படத்தின் கதையை பற்றி தெரிவித்துள்ளார்.

Mari Selvaraj: முதல் முறையாக அதை முயற்சிக்கிறேன்.. டி55 பட கதை இதுதான் – மாரி செல்வராஜ் பேச்சு!
தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 13 Feb 2026 12:05 PM IST

கடந்த 2018ம் ஆண்டில் கதிர் மற்றும் கயல் ஆனந்தி கூட்டணியில் வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள் (Pariyerum Perumal). இப்படத்தை இயக்கியதன் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் இயக்குநராக பாராட்டப்பட்டவர் மாரி செல்வராஜ் (Mari Selvaraj). இவருக்கு இப்படம் மிக பிரம்மாண்ட வெற்றியை கொடுக்கவே, தனது 2வது படத்தை தனுஷை (Dhanush) வைத்து எடுத்தார். கர்ணன் (Karnan) என வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த வரிசையில் இவரின் இயக்கத்தால் இறுதியாக வெளியான திரைப்படம் பைசன் (Bison). துருவ் விக்ரம் (Dhruv Vikram) நடிப்பில் வெளியான இந்த படமானது மக்களிடையே சூப்பர் ஹிட் வெற்றி திரைப்படமாக அமைந்தது.

இந்நிலையில் இப்படத்தை அடுத்ததாக தற்போது மாரி செல்வராஜ், தனுஷின் டி56 (D56) படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகளில் இருந்துவருகிறார். மேலும் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர், தனுஷின் டி56 படத்தின் கதைக்களம் குறித்து பேசியுள்ளார்.

இதையும் படிங்க: ரீ ரிலீஸாகும் உயிருள்ளவரை உஷா… சிம்பு வெளியிட்ட வாழ்த்துப் பதிவு!

டி56 படம் குறித்து மாரி செல்வராஜ் பேசிய வீடியோ பதிவு:

தனுஷின் டி56 திரைப்படத்தின் கதைக்களம் குறித்து மாரி செல்வராஜ் சொன்னது:

அந்த நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ் , “தனுஷின் டி56 படம் ஒரு பீரியட் ஃபேண்டஸி திரைப்படம்தான். எனது வாழ்க்கையில் முதல் முறையாக அதை முயற்சிக்கப்போகிறேன். இந்த படம் ஒரு ஃபேண்டஸி மற்றும் அரசியல், மேலும் பிரிவினை எங்கு தொடங்கியிருக்கும், அந்த பிரிவினையை அப்போதே ஒருவன் முடித்து வைத்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?, போன்ற விதத்தில் இப்படம் தயாராகவுள்ளது. பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை மற்றும் பைசன் எல்லாமே கலந்து இருக்கும். இந்த பிரிவினை எல்லாமே தொடங்கிய காலகட்டம் என்று ஒன்று இருக்கும், அண்ட் காலகட்டத்தில் ஒருவன் அதை முடிக்கிறான் என்ற ஃபேண்டஸி போன்ற கதைக்களத்தில் உருவாகவுள்ளது.

இதையும் படிங்க: லவ் என்றாலே போராட்டம் தானே.. காதல் குறித்து பிரதீப் ரங்கநாதன் பரபரப்பு பேச்சு!

அதனால் இப்படம் பெரிய உழைப்பை கேட்கும் படமாக இருக்கும், அதனாலதான் ரொம்ப நாள் எடுத்துக்கொண்டது. இப்படம் எடுப்பதே பெரிய முயற்சி, நான் ஒரு 5 படத்தை எடுத்தால்தான் என்னால் இப்படத்தை எடுக்கமுடியும், அப்படிப்பட்ட படம். இப்படத்தின் கதையை சொல்லும்போதே, தனுஷ் சார் என்னிடம் ” இப்படத்தை பெருசா பண்ணனும் சார்- னு” சொன்னாரு. அதனால் இப்படத்திற்காக காத்திருந்தோம், பின் வேல்ஸ் நிறுவனம் இப்படத்தில் இணைந்தது. நிச்சயமாக எனது வாழ்க்கையில் இந்த டி56 படம் ஒரு பெரிய படமாக இருக்கும்” என அதில் அவர் பேசியிருந்தார்.

Follow Us