Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நடிகர் நானியின் தி பாரடைஸ் படத்தின் புது ரிலீஸ் தேதி இதுதான்… வைரலாகும் அப்டேட்

The Paradise Movie Release Update: நடிகர் நானியின் நடிப்பில் மிகவும் பிரமாண்டமான பொருட் செலவில் உருவாகி வரும் படம் தி பாரடைஸ். இந்தப் படம் முன்னதாக மார்ச் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது தேதி மாற்றப்பட்டுள்ளது.

நடிகர் நானியின் தி பாரடைஸ் படத்தின் புது ரிலீஸ் தேதி இதுதான்… வைரலாகும் அப்டேட்
தி பாரடைஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 12 Feb 2026 19:34 PM IST

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நானி. இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இவர் தெலுங்கு சினிமாவில் அதிக அளவில் படங்களில் நடித்து வந்தாலும் இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் நானி நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டு ஹிட் தி தேர்ட் கேஸ் படம் இறுதியாக திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் நானியின் நடிப்பில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் உருவாகி வருகின்றது.

இதில் நடிகர் நானி நடிப்பில் தி பாரடைஸ் படம் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த தி பாரடைஸ் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் நிலையில் படம் முன்னதாக மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்தப் படத்தின் புது ரிலீஸ் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் நானியின் தி பாரடைஸ் படத்தின் புது ரிலீஸ் தேதி இதுதான்:

அதன்படி இந்த தி பாரடைஸ் படத்தினை இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா எழுதி இயக்கி உள்ள நிலையில் நடிகர் நானி நாயகனாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தின் புது ரிலீஸ் தேதியைப் படக்குழு தற்போது அறிவித்துள்ளது. அதன்படி படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு தற்போது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

Also Read… ரீ ரிலீஸாகும் மௌனம் பேசியதே படம்… நாஸ்டாலஜியை பகிர்ந்த நடிகை லைலா

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… காதலா? கெரியரா? நீங்க எதை தேர்ந்தெடுப்பீங்க… முதல் நீ முடிவும் நீ படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?