Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Kayadu Lohar: என்னிடம் அந்த விஷயத்தை மாற்றவேண்டும் என நினைக்கிறேன் – கயாடு லோஹர்!

Kayadu Lohar About Her Emotional Breakdowns: தமிழில் கடந்த 2025ம் ஆண்டில் வெளியான டிராகன் என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பல்லவியாக பிரபலமானவர் கயாடு லோஹர். இவர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில், தன்னிடம் மாற்றவேண்டிய குணங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Barath Murugan
Barath Murugan | Updated On: 10 Feb 2026 15:31 PM IST
கோலிவுட் சினிமாவில் இளம் கதநாயகியாக பிரபலமான நடிகையாக இருப்பவர் கயாடு லோஹர். இவர் கடந்த 2021ம் ஆண்டில் கன்னட சினிமாவின் முகில்பேட் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்திற்கு பின் மலையாளத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டு என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார். இதன் மூலம் மலையாள மக்களிடையே பேமஸ் ஆனார்.

1 / 5
தனது 2வது படத்திலே மலையாளம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான கயாடு லோஹர், அப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இதையடுத்தது தெலுங்கு மொழியிலும் படங்களில் நடித்துவந்தார். அந்த விதத்தில் தமிழில் இவருக்கு பிரம்மாண்ட அறிமுக படமாக அமைந்தது டிராகன்.

2 / 5
அஷ்வத் மாரிமுத்து இயக்கிய டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பல்லவி என்ற கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமானார். இதையடுத்து தமிழில் அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து ஒப்பந்தமாகியிருந்தார். மேலும் இவரின் நடிப்பில் தெலுங்கில் ஃபங்கி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படமானது வரும் 2026 பிப்ரவரி 13ம் தேதியில் ரிலீஸாகிறது.

3 / 5
இந்த திரைப்படமானது ஆக்ஷன் காமெடி கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், சமீபத்தில் இதன் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்கப்பட்டிருந்தது. இதையடுத்து இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய கயாடு லோஹர், தனது உணர்ச்சிகள் குறித்து மனம் திறந்துள்ளார்.

4 / 5
அதில் நடிகை கயாடு லோஹர், நான் மிகவும் உணர்ச்சிவசப்படுவேன். எனது பிரச்சனையும் அதுதான். இதனால் நான் ஈசியாக மனம் உடைந்துவிடுவேன். இந்த விஷயத்தை என்னிடம் இருந்து மாற்றவேண்டும் என நினைக்கிறேன். மேலும் நான் எந்த சூழலிலும், எவ்வித தடுமாற்றமும் இன்றி, என்னை வலிமையானவளாக மாற்றுவதற்கு விரும்புகிறேன் என நேர்காணலில் அவர் தெரிவித்துள்ளார்.

5 / 5