Shiva Rajkumar: ஜெயிலர் 2 படம் குறித்து சூப்பர் அப்டேட் சொன்ன சிவராஜ்குமார்!
Shiva Rajkumar About Jailer 2 Movie: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக இருந்துவருபவர் சிவ ராஜ்குமார். இவர் புகழ்பெற்ரற கன்னட நடிகர்களில் ஒருவரான நிலையில், ஜெயிலர் படத்தில் இவர் நடித்து பிரபலமாகியிருந்தார். தற்போது ஜெயிலர் 2 படத்திலும் இவர் நடித்துள்ள நிலையில், அது குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்துள்ளார்.
நடிகர் சிவ ராஜ்குமார் (Shiva Rajkumar) கன்னட சினிமாவில் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழ் மொழியிலும் தொடர்ந்து படங்கள் வெளியாகிவருகிறது. அந்த விதத்தில் இவர் ஜெயிலர் (Jailer) மற்றும் கேப்டன் மில்லர் (Captain Miller) போன்ற படங்களில் நடித்து தமிழ் மக்களுடைய பிரபலமானார். இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் மிக்கது அருமையாகவே இருந்தது. கடந்த 2023ம் ஆண்டில் ரஜினிகாந்தின் (Rajinikanth) நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெயிலர் . இப்படத்தில் ரஜினிகாந்த், விநாயகன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் தமன்னா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். அதிரடியான கதைக்களத்தில் இப்படம் வெளியான நிலையில், இதில் “நரசிம்மா” என்ற கேமியோ வேடத்தில் நடிகர் சிவ ராஜ்குமார் நடித்திருந்தார்.
கடந்த 2023ம் ஆண்டில் வெளியான இப்படம் எதிர்பாராத சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றிருந்தது. இதையடுத்து தற்போது ஜெயிலர் 2 (Jailer 2) படத்திலும் சிவ ராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில், அது குறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் அப்டேட் ஒன்றை தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: கல்லூரிகளில் எனது படங்களை ஒருபோதும் புரோமோஷன் செய்யமாட்டேன் – சசிகுமார் பேச்சு!
ஜெயிலர் 2 படம் குறித்து சிவராஜ்குமார் தெரிவித்த விஷயம் :
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் சிவ ராஜ்குமார். அதில் “நான் ஜெயிலர் படத்தின் தொடர்ச்சியான கதாபாத்திரத்தில் ஜெயிலர் 2 படத்திலும் நடித்துள்ளேன். இப்படத்தில் என்னுடன் நடிகர் எஸ்.ஜே. சூர்யாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்” என கூறியுள்ளார். சமீப காலமாக எஸ்.ஜே. சூர்யாவும் ஜெயிலர் 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துவந்ததாக தகவல்கள் வெளியாகிவந்த நிலையில், தற்போது அவரை நடிப்பதை நடிகர் சிவ ராஜ்குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தற்போது இது தொடர்பான தகவல் இணையத்தில் மக்களிடையே பரவிவருகிறது.
ஜெயிலர் 2 படம் குறித்து நடிகர் சிவக்குமார் கூறிய பதிவு :
#Shivarajkumar – Recent Interview 👀
— I have acted in #Jailer2 as a continuation of the character I played in Jailer. #SJSuryah has also acted with me in this film.#Rajinikanth pic.twitter.com/3KFJsWGMUF
— Movie Tamil (@_MovieTamil) February 10, 2026
இந்த ஜெயிலர் 2 படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்க, சன் பிக்ச்சர்ஸ் நிறுவனமானது தயாரித்துள்ளது. மேலும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஜெயிலர் 1 படத்தில் நடித்துள்ள அதே நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் சில புது முக்கிய பிரபலங்களும் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ஷூட்டிங்கை நடிகர் ரஜினிகாந்த் முழுமையாக முடித்துள்ளாராம்.
இதையும் படிங்க: சரத்குமார் ஆக்ஷன் வேடத்தில் நடித்த ‘ஆழி’.. வெளியானது அதிரடி ட்ரெய்லர்!
மேலும் இப்படத்தில் சில காட்சிகள் மட்டும் இன்னும் படமாக்கப்படவேண்டியுள்ளதாக கூறப்படுகிறது. அதுவும் இந்த 2026 பிப்ரவரி மாதத்தின் இறுதிக்குள் நிறுவடைந்துவிடும் என கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை படக்குழு வரும் 2026 ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுவருவதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.