தனுஷ் நடிப்பில் இளையராஜா பயோபிக் படம் திட்டமிட்டபடி நடக்கும் – அருண் மாதேஸ்வரன்!
Ilaiyaraaja Biopic Movie Update: நடிகர் தனுஷ் தொடர்ந்து கதாநாயகனாக மற்றும் இயக்குநராகவும் படங்களை சிறப்பாக்க உருவாக்கிவருகிறார். அந்த விதத்தில் இவர் இளையராஜாவின் பயோபிக் திரைப்படத்தில் நடிப்பதாக கூறப்பட்டிருந்தது. இப்படத்தின் இயக்குநர் மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகிவந்த நிலையில், அது குறித்து விவரமாக பார்க்கலாம்.
கோலிவுட் சினிமாவையும் கடந்து பான் இந்திய கதாநாயகனாக சாதனை படைத்துவருபவர் தனுஷ் (Dhanush). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. நடிகர் தனுஷ் சினிமாவில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாடகர் என பல்வேறு பணிகளை செய்து வருகிறார். அந்த விதத்தில் இவரின் நடிப்பில் ரிலீஸிற்கு தயாராகியுள்ள படம்தான் கர (Kara). போர்த் தொழில் பட இயக்குநர் விக்னேஷ் ராஜா (Vignesh Raja) இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் 2026 ஏப்ரல் மாதத்தில் வெளியாகவுள்ளது என கூறப்படுகிறது. இதையடுத்து தற்போது அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் (Rajkumar Periasamy)இயக்க, டி55 (D55) படத்தில் தனுஷ் இஅணிந்துள்ளார். மேலும் தனுஷ், பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று கதையில் (Ilayaraaja Biographical) நடிக்கவுள்ளதாக கூறப்பட்டிருந்தது.
இப்படத்தை லோகேஷ் கனகராஜின் (Lokesh Kanagaraj) டிசி (DC) பட இயக்குநர் அருண் மாதேஸ்வரன் ((Arun Matheswaran)) இயக்குவதாக கூறப்பட்டது. ஏற்கனவே தனுஷ் மற்றும் அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் கேப்டன் மில்லர் என்ற படமானது வெளியாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத் காலமாக இணையத்தில் இளையராஜாவின் பயோபிக் கதையை வேறு இயக்குநர் இயக்கவுள்ளார் என பரவிவந்த நிலையில், இப்படத்தை அருண் மாதேஸ்வரன்தான் இயக்கத்தில் திட்டமிட்டபடி உருவாகும் என உறுதியாகியுள்ளது.




இதையும் படிங்க: மௌனம் பேசியதே பட டயலாக்கை ரீகிரியேட் செய்த சூர்யா – வைரலாகும் வீடியோ!
தனுஷ் நடிக்கும் இளையராஜா பயோபிக் படம் குறித்த பதிவு:
#Ilayaraja Biopic is being directed by #ArunMatheswaran. There is no change in this.
Arun Matheswaran is currently directing a film titled #DC with Lokesh.#Dhanush pic.twitter.com/DwwCApXCOL
— Movie Tamil (@_MovieTamil) February 9, 2026
தனுஷ் நடிக்கும் இளையராஜாவின் பயோபிக் படம் எப்போது உருவாகும்:
நடிகர் தனுஷ் தற்போது தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் டி55 படத்தில் நடிக்கவுள்ள நிலையில், இதையடுத்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் டி56 படத்தில் நடிக்கவுள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நாயகனாக நடிக்கவுள்ள நிலையில், அப்படங்கள் குறித்து இன்னும் அறிவிப்புகள் வெளியாகவில்லை. இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தற்போது, லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அடிக்கும் டிசி படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார்.
இதையும் படிங்க: ஜன நாயகன் படத்தை மறுஆய்வுக் குழுவிற்கு அனுப்பியது படக்குழு!
இப்படத்தின் ஷூட்டிங் இன்னும் 2 மாதங்களுக்குள் நிறைவடையும் என கூறப்படும் நிலையில், 2026ம் ஆண்டு இறுதிக்குள் இப்படம் வெளியாகிவிடும். இதையடுத்து படத்தின் பணிகள் துவங்கும் என கூறப்பட்டுள்ள நிலையில், அதைத் தொடந்து 2027ம் ஆண்டு இறுதிக்குள் தனுஷ் நடிக்கும் இளையராஜாவின் பயோபிக் படம் திட்டமிட்டபடி உருவாகும் என அருண் மாதேஸ்வரன் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.. இது குறித்து தகவல் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.