AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Suriya: மௌனம் பேசியதே பட டயலாக்கை ரீகிரியேட் செய்த சூர்யா – வைரலாகும் வீடியோ!

Suriya Recreates Mounam Pesiyadhe Movie Dialogue: சூர்யா மற்றும் அமீர் கூட்டணியில் வெளியான படம்தான் மௌனம் பேசியதே. இப்படமானது 23 ஆண்டுகளுக்கு பின் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் நடிகர் சூர்யா, இப்படத்தின் டயலாக் ஒன்றை ரீகிரியேட் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

Suriya: மௌனம் பேசியதே பட டயலாக்கை ரீகிரியேட் செய்த சூர்யா – வைரலாகும் வீடியோ!
சூர்யா
Barath Murugan
Barath Murugan | Updated On: 09 Feb 2026 15:34 PM IST

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்கள் உருவாகிவருகிறது. இவரின் நடிப்பில் இறுதியாக ரெட்ரோ (Retro) என்ற படமானது வெளியாகிய நிலையில், நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தை அடுத்தாக ஆர்.ஜே.பாலாஜியின் (RJ.Balaji) இயக்கத்தில் உருவாகியுள்ள கருப்பு (Karuppu) படமானது வெளியீட்டிற்கு காத்திருக்கிறது. இந்த படமானது மிக பிரம்மாண்ட கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், 2026 ஏப்ரல் மாதத்தில் படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இயக்குநர் அமீர் (Ameer) மற்றும் சூர்யாவின் கூட்டணியில் கடந்த 2002ம் ஆண்டில் வெளியான திரைப்படம்தான் மௌனம் பேசியதே (Mounam Pesiyadhe). இப்படத்தில் சூர்யா, திரிஷா (Trisha) மற்றும் லைலா (Laila) இணைந்து நடித்திருந்தனர்.

சிறப்பான கதைக்களத்தில் வெளியான இப்படம், கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு பின் வரும் 2026 பிப்ரவரி 13ம் தேதியில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் வரும் வசனம் ஒன்றை நடிகர் சூர்யா ரீகிரியேட் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ஆவேஷம் 2 படம் குறித்து முக்கிய அப்டேட் சொன்ன ஃபகத் பாசில்

மௌனம் பேசியதே படம் குறித்து நடிகர் சூர்யா பேசிய வீடியோ பதிவு:

நடிகர் சூர்யா, மௌனம் பேசியதே படத்தில் காதல் குறித்து பேசிய டயலாக்கை தற்போது ரீகிரியேட் செய்துள்ளார். இந்த படத்தில் பணியாற்றியத் தருணம் குறித்தும், இயக்குநர் மற்றும் இப்படத்தின் கதை குறித்தும் சூர்யா இந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த படத்தின் ரீ- ரிலீஸ் போது ரசிகர்களை திரையரங்குகளில் சந்திப்பதற்கு ஆசைப்படுவதாகவும் அவர் அதில் தெரிவித்துள்ளார். தற்போது இது குறித்த வீடியோ பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

மௌனம் பேசியதே திரைப்படம் :

கடந்த 2002ம் ஆண்டில் வெளியான மௌனம் பேசியதே என்ற படத்தின் மூலம்தான் அமீர் இயக்குநராக அறிமுகமானார். இப்படமானது எமோஷனல், காதல் மற்றும் வித்தியாசமான கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இந்த படத்த்தில் சூர்யாவுடன் திரிஷா, நந்தா மற்றும் நேஹா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இனைந்து நடித்திருந்தனர். இப்படத்தின் மூலமாகத்தான் திரிஷா மற்றும் சூர்யாவின் கம்போ முதல் முறையாக இணைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மை லார்ட் படம் என்னை ஆழமாகப் பாதித்து – இயக்குநர் மாரி செல்வராஜ்

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த நிலையில், இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வரவேற்கப்பட்டிருந்தது. இப்படமானது வெளியாகி கிட்டத்தட்ட 23 ஆண்டை கடந்த நிலையில், வரும் 2026 பிப்ரவரி 13ம் தேதியில் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us