Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Priyanka Mohan: அந்த ஹீரோ எனக்கு வாழ்க்கைத் துணை வேண்டும் – பிரியங்கா மோகன் சொன்ன நடிகர் யார் தெரியுமா?

Priyanka Mohan Reveals Her Dream Partner: தென்னிந்திய மொழிகளில் படங்களில் நடித்துவருபவர் பிரியங்கா மோகன். இவர் தமிழிலும் புது படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர், தனக்கு அந்த தமிழ் நடிகர் போல வாழ்க்கைத் துணைவேண்டும் என கூறியுள்ளார். அவர் சொன்ன நடிகர் யார் என பார்க்கலாம்.

Barath Murugan
Barath Murugan | Updated On: 08 Feb 2026 14:23 PM IST
சினிமாவில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான ஓந்த் கதே ஹெல்லா என்ற கன்னட படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியங்கா மோகன். இப்படத்தில் இவருக்கு வரவேற்பு கிடைக்க, தனது 2வது படத்தில் நானிக்கு ஜோடியாக, நானி தி கேங் லீடர் படத்தில் நடித்திருந்தார். இப்படம் இவருக்கு தெலுங்கு மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை கொடுத்தது.

1 / 5
தெலுங்கில் தொடர்ந்து 2 படங்களில் நடித்திருந்த பிரியங்க மோகனுக்கு, தமிழில் அறிமுக திரைப்படமாக அமைந்தது டாக்டர். இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான டாக்டர் படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து தமிழில் பிரபலமானார். இப்படத்தின் மூலம் இவருக்கு தமிழில் அடுத்தடுத்த படங்கள் அமைந்தது.

2 / 5
இவர் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், சூர்யா முதல் தனுஷ் போன்ற பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் இவர் சமீபகாலமாக மக்கள் மத்தியில் விமர்சனங்கள் பெற்றுவருகிறார். ரசிகர் ஒருவரை இவர் திட்டுவதுபோன்ற வீடியோ வெளியாகி இவருக்கு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. மேலு இவருக்கு தொடர்ந்து பல படங்கள் தோல்வியில் முடிந்தது.

3 / 5
மேலும் தனது விடாமுயற்சியால் சினிமாவில் தற்போதும் கதாநாயகியாகவே நடித்துவருகிறார். மேலும் இவர் தற்போது நடிகர் கவினுக்கு ஜோடியாக புது படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த பிரியங்கா மோகன், தனது வாழ்க்கைத் துணை எந்த நடிகரை போல இருக்கவேண்டும் என்பதை தெரிவித்துள்ளார்.

4 / 5
அந்த நிகழ்ச்சியில் பிரியங்கா மோகனிடம் மேடையில் தனுஷ், சிவகார்த்திகேயன் மற்றும் சூர்யா போன்ற நடிகர்களின் புகைப்படங்கள் காண்பிக்கப்பட்டது. அதில் சூர்யாவின் புகைப்படத்தை பார்த்த பிரியங்கா மோகன், சூர்யா மிகவும் தன்மையானவர், எனது வாழ்க்கைத் துணை அவரைப்போலவே இருக்கவேண்டும் என அவர் அதில் தெரிவித்தார். இவர் சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் என படத்தில் ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

5 / 5