மிகச் சிறந்த திரைப்படம்… லோகேஷ் கனகராஜின் டிசி படத்தைப் பாராட்டிய மகேஷ் பாபு
Mahesh Babu praised DC Movie | இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகம் ஆன படம் டிசி. இந்தப் படத்தினை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் தெலுங்கு சினிமாவில் உள்ள உச்ச நடிகர் மகேஷ் பாபு பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் மகேஷ் பாபு. இவரது நடிப்பில் கடந்த 2024-ம் ஆண்டு இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் குண்டூர் காரம். இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் படம் எதுவும் திரையரங்குகளில் வெளியாகவில்லை. மேலும் வருகின்ற 2027-ம் ஆண்டே நடிகர் மகேஷ் பாபுவின் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வரலாற்று பாணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில் நடிகர் மகேஷ் பாபு சமீபத்தில் வெளியான டிசி படத்தைப் பார்த்துவிட்டு வெகுவாகப் பாராட்டி உள்ளார். இந்தப் படத்தில் நடிகர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகம் ஆகி உள்ளார். மேலும் இந்தப் படத்தினை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் எழுதி இயக்கி உள்ள நிலையில் படத்தில் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரின் இசை மிகப்பெரிய பலமாக இருந்தது என்று தொடர்ந்து படத்தைப் பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.




லோகேஷ் கனகராஜின் டிசி படத்தைப் பாராட்டிய மகேஷ் பாபு:
தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் டிசி படத்தைப் பார்த்து ரசிகர்களும் பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் இந்தப் படத்தைப் பார்த்த நடிகர் மகேஷ் பாபு தனது எக்ஸ் தள பக்கத்தில் படத்தைப் பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன்படி அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியதாவது, எவ்வளவு புதுமையான மற்றும் மிகச் சிறப்பான திரைப்படம். மிகவும் அருமையாக இருந்தது. படத்தின் ஒவ்வொரு பகுதியையும் நான் மிகவும் ரசித்தேன். ஒட்டுமொத்தக் குழுவினருக்கும் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… வேதாளம் படத்தில் அந்த பாடல் வேண்டாம் என்று சொன்னேன் – அனிருத் ரவிச்சந்தர்
நடிகர் மகேஷ் பாபு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#DC… what an original and outstanding film 👏🏻👏🏻👏🏻 Just too cool… 😎😎😎 Loved every bit of it!! Congrats to the entire team…🤗🤗❤️❤️@Dir_Lokesh @ArunMatheswaran @anirudhofficial #WamiqaGabbi @isanjkayy @mukesh_DOP @editor_prasanna @skannanartdir @sunpictures
— Mahesh Babu (@urstrulyMahesh) August 16, 2026
Also Read… Sivakarthikeyan: கிராமத்தில் மாணவர்கள், விவசாயிகளுடன் சுதந்திர தினத்தை கொண்டாடிய சிவகார்த்திகேயன்..!