Sivakarthikeyan: கிராமத்தில் மாணவர்கள், விவசாயிகளுடன் சுதந்திர தினத்தை கொண்டாடிய சிவகார்த்திகேயன்..!
Sivakarthikeyan celebrates 80th Independence Day: நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது சேயோன் படத்தின் ஷூட்டிங் பணிகளுக்காக மதுரையில் உள்ளார். இன்று (15/08/2026) 80வது சுநத்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு மதுரை என்.எஸ்.எஸ் மாணவர்கள் மற்றும் விசாயிகளுடன் சிவகார்த்திகேயன் சுதந்திர தின விழாவை கொண்டாடியுள்ளார்.
கோலிவுட் சினிமாவில் தற்போது முன்னது ஹீரோக்கள் வரிசையில் இருந்துவருபவர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவர் இறுதியாக பராசக்தி (Parasakthi) என்ற படத்தில் நடித்திருந்தார். இயக்குநர் சுதா கொங்கராவின் (Sudha Kongara) இயக்கத்தில், உண்மையான சம்பவத்தை மையமாக கொண்டு இயக்கப்பட்ட இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்த படத்திற்கு பின், சிவகார்த்திகேயன் இணைந்து நடித்துவரும் பக்கா கிராமத்து திரைப்படம்தான் சேயோன் (Seyon). இதை தாய் கிழவி (Thaai Kizhavi) பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் (Sivakakumar Murugesan) இயக்க, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இதை தயாரித்துவருகிறது. இப்படம் விருமாண்டி சாமி மற்றும் முருகனின் கதையை மையமாக கொண்ட ஒரு பக்தி மற்றும் அதிரடி ஆக்ஷன்கள் கொண்ட படமாக உருவாக்கப்பட்டுவருகிறது.
இன்று, 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டுவருகிறது. இந்த 80வது சுதந்திர தின விழாவை நடிகர் சிவகார்த்திகேயன், மதுரை கிராமத்து விவசாயிகள் மற்றும் என்.எஸ்.எஸ். மாணவர்களுடன் இணைந்து கொண்டாடியிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: ஒவ்வொரு மூச்சிலும் சுதந்திரம்… ஒவ்வொரு இதயத்திலும் பெருமிதம்… ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட தர்மன் படக்குழு
மாணவர்கள் மற்றும் விவசாயிகளுடன் சுதந்திர தின விழாவை கொண்டாடிய சிவகார்த்திகேயன் தொடர்பான எக்ஸ் பதிவு :
🇮🇳 #Sivakarthikeyan (#SK) @Siva_Kartikeyan celebrated Independence Day with students and farmers in a local village, spreading the spirit of freedom, unity, and togetherness. ❤️🇮🇳 pic.twitter.com/1YL1KeVe59
— Movies Singapore (@MoviesSingapore) August 15, 2026
இந்த புகைப்படத்தில் மாணவர்கள் மற்றும் விவசாயிகளுடன் சிவகார்த்திகேயன் நிற்பதுபோன்ற இருக்கிறது. தனது நெஞ்சில் தேசிய கோடியை வாய்த்த வண்ணம் சிவகார்த்திகேயன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.
சேயோன் படப்பிடிப்பில் தீவிரம் காட்டும் சிவகார்த்திகேயன்:
நடிகர் சிவகார்த்திகேயனின் 26வது படமாக சேயோன் படம் உருவாக்கப்பட்டுவருகிறது. இதில் சிவகார்த்திகேயன் கிராமத்து சாமியாடியாக நடித்துவருகிறார். அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துவருகிறார். இது தமிழில் இவர் நேரடியாக நடிக்கும் முதல் படமாகும்.
இதையும் படிங்க: சினிமாவில் 51வது வருடத்தில் சூப்பர் ஸ்டார்… ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்ட தர்மன் படக்குழு!
இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துவரும் நிலையில், படத்தின் பணிகள் நிறைக்க நடைபெற்றுவருகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்த நிலையில், தற்போது 2வது கட்ட ஷூட்டிங் மதுரையில் நடைபெற்றுவருகிறது. இப்படத்தின் ஷூட்டிங்கை செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க படக்குழு திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.