AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஒவ்வொரு மூச்சிலும் சுதந்திரம்… ஒவ்வொரு இதயத்திலும் பெருமிதம்… ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட தர்மன் படக்குழு

Dharman Movie Independence Day poster | இந்தியா முழுவதும் இன்று 80-வது சுதந்திர தினத்தை மக்கள் கொண்டாடி வரும் நிலையில் தர்மன் படக்குழுவினர் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்பெஷல் போஸ்டரை படக்குழு வெளியிட்டது தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு மூச்சிலும் சுதந்திரம்… ஒவ்வொரு இதயத்திலும் பெருமிதம்… ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட தர்மன் படக்குழு
தர்மன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 15 Aug 2026 13:25 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்களின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. சமீபத்தில் ரஜினிகாந்தின் நடிப்பில் 173-வதாக உருவாகும் படம் தற்போது அதிக அளவில் பிரச்சனைகளை சந்தித்தது. தொடர்ந்து பல பிரச்சனைகளை சந்தித்து ஒரு வழியாக படப்பிடிப்பை தொடங்கியது. ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் நடிகர் கமல் ஹாசன் இந்தப் படத்தை தயாரித்து வரும் நிலையில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து எழுதி இயக்கி வருகிறார்.

மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. சமீபத்தில் இந்தப் படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் படப்பிடிப்பு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து சிம்ரன், ராஷி கன்னா, யோகி பாபு உட்பட பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

சுதந்திர தின் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டது தர்மன் படக்குழு:

தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இன்று இந்தியா முழுவதும் சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் நிலையில் படக்குழு தற்போது சிறப்பு போஸ்டரை வெளியிட்டு உள்ளனர். அந்த பதிவு தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்தப் பதிவில் ஒவ்வொரு மூச்சிலும் சுதந்திரம்… ஒவ்வொரு இதயத்திலும் பெருமிதம் என்றும் படக்குழு பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read… அதிக செல்போன் பயன்பாடு.. நடிகை ஷகிலாவிற்கு அறுவை சிகிச்சை

தர்மன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட ரிலீஸ்.. திருப்பதியில் மொட்டையடித்த இயக்குநர் வெங்கி அட்லூரி!

Follow Us