AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வாழ வேணும் நாம மழ காத்து பூமியா… 10 ஆண்டுகளைக் கடந்தது ஜோக்கர் படம் – கொண்டாடும் படக்குழு

10 Years Of Joker Movie | தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்த படம் ஜோக்கர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தற்போது படக்குழுவினர் அதனை கொண்டாடி வருகின்றனர்.

வாழ வேணும் நாம மழ காத்து பூமியா… 10 ஆண்டுகளைக் கடந்தது ஜோக்கர் படம் – கொண்டாடும் படக்குழு
ஜோக்கர்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 12 Aug 2026 15:19 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 2016-ம் ஆண்டு 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ஜோக்கர். இந்தப் படத்தை இயக்குநர் ராஜு முருகன் எழுதி இயக்கி இருந்தார். பொலிட்டிகள் சட்டையர் பாணியில் திரையரங்குகளில் வெளியான படம் ஜோக்கர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் குரு சோமசுந்தரம் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் காயத்ரி கிருஷ்ணா,
மு ராமசுவாமி, பி.வி.ஆனந்தகிருஷ்ணன், பாவா செல்லதுரை, கனியப்பன், வி.தாமரைசெல்வன், விமலா, எஸ்.ஏ.லெட்சுமணன், எஸ்.மகாலட்சுமி மற்றும் கலை கண்ணன் ஆகியோர் இணைந்து நடித்து இருந்தனர்.

மேலும் இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

10 ஆண்டுகளைக் கடந்தது ஜோக்கர் படம்:

பொலிட்டிகள் சட்டையர் படமாக உருவாகி இருந்த இந்தப் படத்தில் அரசு நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்தில் நடைபெறும் நிகழ்வுகளை கிண்டலடிக்கும் விதமாக உருவாக்கப்பட்டு இருந்தது. மேலும் அரசு வழங்கும் நிவாரணம் எந்த அளவிற்கு தரமானதாக இருக்கும் என்பது குறித்து மக்களுக்கு புரியும் வகையில் எடுக்கப்பட்டு இருந்ததால் படம் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் படத்தினை குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… குரங்குடன் வீடியோ வெளியிட்டு சிக்கலில் சிக்கிய நடிகர் விக்ரம்

ஜோக்கர் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… 26 ஆண்டுகளைக் கடந்தது நடிகர் பிரசாந்தின் பார்த்தேன் ரசித்தேன் படம் – இயக்குநர் வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு

Follow Us