26 ஆண்டுகளைக் கடந்தது நடிகர் பிரசாந்தின் பார்த்தேன் ரசித்தேன் படம் – இயக்குநர் வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு
26 Years Of Parthen Rasithen Movie Starring Prashanth | தமிழ் சினிமாவில் 2000 ஆண்டுகளில் மிகவும் பிரபலமான நாயகனாக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற பார்த்தேன் ரசித்தேன் படம் இன்றுடன் 26 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
தமிழ் சினிமாவில் கடந்த 2000-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பார்த்தேன் ரசித்தேன். இந்தப் படத்தை இயக்குநர் சரண் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடித்து இருந்தார். இவருடன் இணைந்து நடிகர்கள் சிம்ரன், லைலா, ரகுவரன், ஜெய் கணேஷ், சண்முகசுந்தரி, சிவநாராயண மூர்த்தி, வினு சக்கரவர்த்தி, ராகவா லாரன்ஸ், சார்லி, தாமு, வையாபுரி, ஜோதி, பாத்திமா பாபு, மணீஷ் பொருண்டியா, பெசன்ட் ரவி மற்றும் ஸ்ரீதர் என நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான செரீன் மூவி மேக்கர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் எஸ். திருவேங்கடம் தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




26 ஆண்டுகளைக் கடந்தது பிரசாந்தின் பார்த்தேன் ரசித்தேன் படம்:
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்தப் படத்தின் இயக்குநர் சரண் தற்போது வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, அமர்க்களம் , பார்த்தேன் ரசித்தேன் , வசூல்ராஜா எம் பி பி எஸ் இந்த மூன்று படங்களுமே என் ஆகஸ்ட் ரிலீஸ் Blockbuster திரைப்படங்கள் என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இயக்குநர் சரண் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
அமர்க்களம் , பார்த்தேன் ரசித்தேன் , வசூல்ராஜா எம் பி பி எஸ் இந்த மூன்று படங்களுமே என் ஆகஸ்ட் ரிலீஸ் Blockbuster திரைப்படங்கள் ! pic.twitter.com/KWlN1a9lxc
— SARAN (@dirsaran) August 11, 2026
Also Read… லிவ் இன் ரிலேஷனில் இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகை.. உண்மையை உடைத்த பிரபலம்!