இவ்வளவு அழகான ரொமாண்டிக் ட்ராமா படம் ஏன் கொண்டாடப்படவில்லை? இந்தியில் வெளியாக ஏக் தின் படத்தின் விமர்சனம் இதோ
OTT review for Ek Din movie | தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சாய் பல்லவி இந்தி சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆன படம் ஏக் தீன். இந்தப் படத்தின் ஓடிடி விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.
இந்தி சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் அமீர் கான். இவரது மகன் ஜுனைத் கான் நாயகனாகவும் நடிகை சாய் பல்லவி நாயகியாகவும் நடித்து திரையரங்குகளில் வெளியான படம் ஏக் தீன். கடந்த மே மாதம் 1-ம் தேதி 2026-ம் ஆண்டு இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானது. தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சாய் பல்லவி இந்தி சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆன முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் குணால் கபூர், கவின் டேவ், ரேஷ்மா ஷெட்டி, ஜெனிபர் இம்மானுவேல், அஸ்தா குலாட்டி, நேஹா வியாசோ, சகோரி திவேதி, ராஜு படேல், சம்தா சாகர், பிரகதி மிஸ்ரா மற்றும் ராஜேந்திர ஜாதவ் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.
இயக்குநர் சுனில் பாண்டே இந்தப் படத்தை இயக்கி உள்ள நிலையில் அமீர் கான் புரடெக்ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் மன்சூர் கான், அமீர் கான் மற்றும் அபர்ணா புரோஹித் ஆகியோர் இணைந்து தயாரித்து உள்ளனர். மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியில் வெளியாக ஏக் தின் படத்தின் விமர்சனம் இதோ:
ஒரு ஐடி நிறுவனத்தில் ஜுனைத் மற்றும் சாய் பல்லவி ஒன்றாக வேலை செய்கிறார்கள். ஜுனைத் 2.5 வருடங்களாக அந்த நிறுவனத்தில் வேலை செய்தாலும் அவரது டீம் மெட்ஸ் தவிற மற்றவர்கள் அவர் குறித்து தெரிந்துகொள்ளவில்லை. ஒரு இன்விசிபில் மேனாக இருக்கும் ஜுனைத்திற்கு சாய் பல்லவி மீது காதல் இருந்தது. அதே நேரத்தில் சாய் பல்லவி தனது டீம் லீட் மீது காதலில் இருந்தார். திருமணம் ஆன அவர் சாய் பலல்வியிடம் தனது மனைவியுடன் திருமண வாழ்க்கை சரியாக இல்லை என்றும் அவரை விவாகரத்து செய்ய உள்ளேன் என்று பொய் கூறி சாய் பல்லவியை ஏமாற்றி இருப்பார்.




Also Read… ஸ்கூல் படிக்கும் போது… சூர்யா குறித்த நினைவுகளை பகிர்ந்த மமிதா பைஜூ
நிறுவனத்தில் உள்ள அனைவரும் ஜப்பான் டூர் சென்ற இடத்தில் சாய் பல்லவிக்கு தனது காதலன் பொய் சொல்லி ஏமாற்றியது தெரியவருகிறது. அதனைத் தொடர்ந்து என்ன நடந்தது ஜுனைத் கான் தனது காதலை சாய் பல்லவியிடம் கூறினாரா இல்லையா என்பதே படத்தின் கதை. ரொமாண்டிக் ட்ராமா பாணியில் உருவான இந்தப் படம் இரண்டு மணி நேரம் கொண்டு இருந்தது. படம் பார்க்க தொடங்கி எப்படி அந்த இரண்டு மணி நேரம் போனது என்று தெரியாத அளவிற்கு மிகவும் அழகாக இந்தப் படத்தை இயக்கி உள்ளனர். இந்தப் படம் நிச்சயமாக கொண்டாடப்பட வேண்டிய படம். தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் காணக் கிடைக்கின்றது.