AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Jason Sanjay: உங்கள் வரவு நல்வரவாகட்டும் சஞ்சய்.. ஜேசன் சஞ்சயின் சிக்மா படத்தை வாழ்த்திய சூர்யா – ஜோதிகா!

Suriya And Jyotika Praise Jason Sanjay: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாகவும், நட்சத்திர ஜோடியாகவும் இருந்துவருபவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்கள் இருவருமே முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சயின் சிக்மா படத்தின் வெளியீட்டை முன்னிட்டு பாராட்டி பதிவை வெளியிட்டுள்ளார். அது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

Jason Sanjay: உங்கள் வரவு நல்வரவாகட்டும் சஞ்சய்.. ஜேசன் சஞ்சயின் சிக்மா படத்தை வாழ்த்திய சூர்யா – ஜோதிகா!
ஜேசன் சஞ்சயை வாழ்த்திய சூர்யா மற்றும் ஜோதிகாImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 01 Oct 2026 19:59 PM IST

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகிவருகிறது. இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் விஸ்வநாத் & சன்ஸ் (Vishwanath And Sons). இந்த படத்தை இயக்குநர் தெலுங்கு அட்லூரி (Venky Atluri) இயக்கியிருந்த நிலையில், கடந்த 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகியிருந்தது. இந்த திரைப்படமானது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின் மலையாள இயக்குநரின் இயக்கத்தில் சீன் (Scene) படத்தில் நடித்துவந்தார். இப்படத்திற்கு பின் தற்போது டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா 48 படத்தில் நடித்துவருகிறார். மேலும் அண்மையில் தனது 20வது திருமண நாளை முன்னிட்டு சூர்யா மற்றும் ஜோதிகா (Jyotika) இருவரும் வெளிநாட்டில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்டிருந்தனர்.

அந்த விதத்தில் தங்களின் திருமண வாழ்க்கையை 20வது ஆண்டுகளாக சிறப்பாக கொண்டு செல்கின்றனர் என பலரும் வாழ்த்தியிருந்தனர். அந்த வகையில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடியாக சூர்யா மற்றும் ஜோதிகா இருந்துவருகிறார்கள். இந்நிலையில் இந்த ஜோடி, தற்போது ஜேசன் சஞ்சய்யின் (jeson Sanjay) சிக்மா (Sigma) படத்தை வாழ்த்தியுள்ளது. இது தொடர்பான பதிவு இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: கொஞ்சம் கூடுதல் திரை நேரம்.. ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரஸ்யமான தகவல் சொன்ன சிவராஜ்குமார்!

ஜேசன் சஞ்சயின் சிக்மா படத்தை பாராட்டி பதிவை வெளியிட்ட சூர்யா:

இந்த பதிவில் சூர்யா, “உங்களின் வரவு நல்வரவாகட்டும் சஞ்சய், குட்டியாக இருந்த சஞ்சய் இப்போது இயக்குநராகிவிட்டார் என்பதை நம்ப முடியவில்லை!. நாளை ஒரு பெரிய நாள். ஜேசன் சஞ்சய்க்கும் மற்றும் சிக்மா படக்குழுவுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என அதில் தெரிவித்துள்ளார்.

ஜேசன் சஞ்சயின் சிக்மா படத்தை பாராட்டிய ஜோதிகா:

அந்த பதிவில் ஜோதிகா, “அன்புள்ள ஜேசன் ராஜ்ய மற்றும் சிக்மா படக்குழுவுக்கு. சிக்மா படத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் விளம்பரப் பணிகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் பார்த்து வருகிறேன். நீங்கள் வளர்ந்துள்ள இந்த இளைஞனைப் பார்க்கும்போது, ​​மிகவும் பக்குவமாகவும், நிதானமாகவும், இயல்பாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் பெற்றோருக்கு ஒரு சிறந்த மகனாகவும் திகழ்கிறீர்கள்.

இதையும் படிங்க: எல்லாரும் என்ன ட்ரிகெர் பண்ணுறாங்க.. கண்ணீர்விட்ட தன்யா – பிக் பாஸ் புரோமோ!

உங்களை நோக்கி வரும் இந்த வெற்றிக்கு நீங்கள் முழுமையாகத் தகுதியானவர் என்பதை இது எனக்கு உணர்த்துகிறது. உங்களுக்கும் உங்கள் குழுவினர் அனைவருக்கும் ஒரு அற்புதமான வெளியீடு அமைய வாழ்த்துகிறேன்” என அதில் தெரிவித்துள்ளார்.

Follow Us