AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அப்பா – அம்மாவை நான் வெவ்வேறு விதங்களில் ஒப்பிடுவேன்… ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்

Jason Sanjay talks about his parents | தமிழ் சினிமாவில் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் சிக்மா. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆக உள்ள இயக்குநர் ஜேசன் சஞ்சய் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது.

அப்பா – அம்மாவை நான் வெவ்வேறு விதங்களில் ஒப்பிடுவேன்… ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்
ஜேசன் சஞ்சய்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 01 Oct 2026 14:26 PM IST

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்து தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராக ஆகி உள்ளார் தளபதி விஜய். இவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பே இனி படங்களில் நடிக்கப் போவதில்லை என்று தெரிவித்துவிட்டார். இது அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தினாலும் தேர்தலில் வெற்றிப் பெற்று தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராக உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய் முதலமைச்சராக இருந்தாலும் அவர் நடிக்கவில்லை என்ற வருத்தம் ரசிகர்களிடையே உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இவரது மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தது தமிழ் சினிமா ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதன்படி ஜேசன் சஞ்சய் தற்போது தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி உள்ளார். இவர் இயக்குநராக அறிமுகம் ஆன படம் சிக்மா.

இந்தப் படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்து உள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ள நிலையில் படம் நாளை 02-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் ஜேசன் சஞ்சய் பிசியாக உள்ள நிலையில் அவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் தனது அம்மா – அப்பா குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அப்பா – அம்மாவை நான் வெவ்வேறு விதங்களில் ஒப்பிடுவேன்:

என் அம்மாவையும் அப்பாவையும் வெவ்வேறு விதங்களில் ஒப்பிட்டுப் பார்க்கிறேன். அம்மாவிடம், ஒருவேளை வாரத்திற்கு ஒரு முறையாவது, ஏதாவது தவறு செய்ததற்காகத் திட்டு வாங்குவேன். ஆனால், வழக்கமான அப்பாக்களோ அவ்வப்போது அதாவது சில மாதங்களுக்கு ஒரு முறையாவது கோபப்படுவார்கள். ஆனால் அப்படி கோபப்படும்போது, ​​அவர்கள் எரிமலையாக வெடித்துவிடுவார்கள். அது அப்பாக்களுக்கே உரிய ஒரு இயல்பு. அதை நான் மதிக்க வேண்டும், ஏனென்றால் சில குறிப்பிட்ட விஷயங்கள் மட்டுமே அவர்களை அப்படி கோபப்பட வைக்கும். சிறு வயதில் நான் ஏதாவது பொய் சொல்லியிருக்கலாம் நான் ஒன்றும் புனிதனோ அல்லது மிகுந்த நேர்மையாளனோ அல்ல என்று ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

Also Read… ஏழு கடல் ஏழு மலை முதல் சிக்மா வரை… இந்த வாரம் தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ஜெயிலர் 2 படத்திலிருந்து வெளியானது பிந்தாஸ் பாடலின் லிரிக்கள் வீடியோ!

Follow Us