AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

விஜய் நடித்த ‘லியோ’ கஃபே.. ஜம்மு காஷ்மீரில் இப்போ இதுதான் டிரெண்டிங்.. குவிந்து வரும் ரசிகர்கள்!

Jammu And Kashmir Vijay Leo cafe : ஜம்மு காஷ்மீரில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் நடித்த லியோ படத்தில் வரும் கஃபேவில் அவரது ரசிகரிகள் குவிந்து வருகின்றனர். இதனால், அந்த கஃபே தவிர்க்க முடியாத சுற்றுலாத்தலமாக மாறி உள்ளது.

விஜய் நடித்த ‘லியோ’ கஃபே.. ஜம்மு காஷ்மீரில் இப்போ இதுதான் டிரெண்டிங்.. குவிந்து வரும் ரசிகர்கள்!
லியோ கஃபே.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 30 Sep 2026 07:42 AM IST

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நடித்த லியோ படத்தின் சில காட்சிகள் ஜம்மு காஷ்மீரில் உள்ள உணவகத்தில் படம் பிடிக்கப்பட்டிருந்தது. இந்த உணவகத்துக்கு தென் இந்தியாவில் இருந்து வரும் ஏராளமான விஜயின் ரசிகர்கள் அங்கு குவிந்து வருகின்றனர். கடந்த 2023- ஆம் ஆண்டு லியோ படம் வெளியாகி இருந்தது. இதில், ஜம்மு காஷ்மீரின் மட்டான் பகுதி அருகே உள்ள சிபார் என்ற உணவகத்தில் சில காட்சிகள் படம் பிடிக்கப்பட்டிருந்தன. இந்த உணவகமானது பஹல்காமில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டரும், ஸ்ரீநகரில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த உணவகத்தில், விஜயின் ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். பொதுவாகவே, தமிழகத்தில் இருந்து சுற்றுலா செல்லும் பயணிகள் இந்த உணவகத்துக்கு ஆர்வமாக சென்று பார்த்து வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீரில் லியோ கஃபேவில் குவியும் ரசிகர்கள்

தற்போது, லியோ படத்தில் நடித்த விஜய் தமிழகத்தின் முதல்வராக ஆன நிலையில், இந்த உணவகத்தின் கவனம் மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. லியோ படம் வெளியான நாள் முதலை இந்த உணவகத்துக்கு அவரது ரசிகர்கள் ஏராளமானோர் வரத் தொடங்கியுள்ளனர். தற்போது, காஷ்மீருக்கு சுற்றுலா செல்லும் தமிழ்நாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் விஜயின் ரசிகர்கள் தங்களது சுற்றுலா இடங்களில் ஒன்றாக இந்த லியோ கபைவையும் ஒன்றாக சேர்த்துள்ளனர். இதன் காரணமாக, லியோ கபே உணவகத்தில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான தென்னிந்திய ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.

மேலும் படிக்க: நெல்லையை உலுக்கிய பயங்கரம்.. ஒரே நாளில் 2 கொலைகள்.. ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த சோகம்!

விஜய் நடித்த இடத்தில் செல்ஃபி மற்றும் ரீல்ஸ் பதிவு

லியோ படத்தில் இந்த கஃபேவின் உரிமையாளராக நடித்திருந்த விஜய் ஸ்டைலாக தனது ஜாக்கெட்டை கழற்றும் அதே இடத்தில் நின்று சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து வருகின்றனர். தென்னிந்தியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் காஷ்மீர் பயண திட்டத்தில் ஒரு தவிர்க்க முடியாத இடமாக இந்த இடம் உருவாகியுள்ளது. இங்கு, விஜய் தனது ஜாக்கெட்டை கழட்டும் இடம், சாண்டி மாஸ்டருடன் சண்டையிடும் இடம் ஆகியவற்றில் நின்று கொண்டு ரீல்ஸும் பதிவிட்டு வருகின்றனர்.

கஃபே முழவதும் விஜய் படங்கள்- லியோ போஸ்டர்கள் . . .

இது மட்டும் இன்றி லியோ ஸ்பெஷல் மெனுவான படத்தில் காட்டப்படும் புகழ் பெற்ற சாக்லேட் காபி அல்லது ஹாட் சாக்லேட் மற்றும் மெனுக்களுடன் படங்களும் எடுத்துக் கொள்கின்றனர் என்று கபே மேனேஜர் சப் ஸார் அகமது லோன் தெரிவித்துள்ளார். இதனை, மேலும் மெருகேற்றுவதற்காக கபே முழுவதும் விஜயின் புகைப்படங்கள், லியோ திரைப்பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திரைப்படத்தில் பார்த்த இடத்தை நேரில் பார்க்க ரசிகர்கள் விரும்புவதால் இந்த பகுதி சினிமா சுற்றால தலமாக மாறி உள்ளது.

மேலும் படிக்க: தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்.. யார் யாருக்கு என்ன பொறுப்பு!

Follow Us