AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அன்பில் மகேஸ் கூட்டாளி இடங்களில் சிசிபி திடீர் சோதனை.. 44 ஆவணங்கள்- மடிக்கணினி பறிமுதல்.. விரைவில் அடுத்தக்கட்ட நடவடிக்கை!

CCP Raids Anbil Mahesh Associate Premises : முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உதவியாளர் உள்ளிட்டோரின் வீடுகளில் மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் 44 ஆவணங்கள் மற்றும் ஒரு மடிக்கணினி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .

அன்பில் மகேஸ் கூட்டாளி இடங்களில் சிசிபி திடீர் சோதனை.. 44 ஆவணங்கள்- மடிக்கணினி பறிமுதல்.. விரைவில் அடுத்தக்கட்ட நடவடிக்கை!
கோப்புப்படம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 30 Sep 2026 06:24 AM IST

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார சான்றிதழ் உள்ளிட்டவை வழங்குவதற்காக ரூ. 100 கோடி வரை மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதில், தனியார் பள்ளிகள் சங்க தலைவர் பி. டி. அரசகுமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அப்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த அன்பின் மகேஷ் பொய்யாமொழி பெயரும் சேர்க்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை திரட்டும் வகையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உதவியாளர் வீடுகள், பி.டி. அரசகுமார் மற்றும் தலைமறைவாக உள்ள முத்துக்குமார் ஆகியோரின் வீடுகள் அமைந்துள்ள சாலிகிராமம், சூளைமேடு, கோடம்பாக்கம், நாவலூர், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் மத்திய குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று செவ்வாய்க்கிழமை ( செப்டம்பர் 29- ஆம் தேதி) அதிரடி சோதனை மேற்கொண்டிருந்தனர்.

சிசிபி சோதனையில் 44 ஆவணங்கள்- மடிக்கணினி பறிமுதல்

இந்தச் சோதனையின் நிறைவில், 44 ஆவணங்கள் மற்றும் ஒரு மடிக்கணினி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இவற்றை ஆய்வுக்கு உட்படுத்தி வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மத்திய குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த திமுக ஆட்சியில் சென்னை சாலிகிராமம், மெஜஸ்டிக் காலனியை சேர்ந்த பி.டி. அரசகுமார் என்பவர் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் என்ற பெயரில் பதிவு செய்யாத சங்கத்தை தொடங்கி நடத்தி வந்தார்.

மேலும் படிக்க: சவுக்கு சங்கருக்கு மீண்டும் சிறைவாசம்.. 3 ஆண்டுகள் தண்டனை.. எழும்பூர் நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு!

தனியார் பள்ளி சான்றிதழ் வழங்க ரூ. 100 கோடி மோசடி

இதில், தனக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கு மற்றும் அதிகார தொடர்புகளை பயன்படுத்தி தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகார சான்றிதழ், பள்ளிகளின் தரம் உயர்வு சான்றிதழ், சி. எம். டி. ஏ. மற்றும் டி. டி. சி. பி. அனுமதிகளை பெற்று தருவதாக கூறி பல்வேறு தனியார் பள்ளிகளின் உரிமையாளர்களிடம் ரூ. 100 கோடி வரை லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இதில், பி.டி. அரசகுமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது தான், அவர் நிபந்தனை ஜாமீனுடன் சிறையில் இருந்து வெளிவந்துள்ளார்.

அடுத்தடுத்து நடைபெறும் சிசிபி சோதனை

இவருடன் சேர்த்து மதுரையை சேர்ந்த ஆரோக்கியராஜ் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சுரேஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த மோசடியில் அன்பில் மகேஷுக்கு தொடர்பு இருப்பதாக கருதிய போலீசார் திருச்சியில் உள்ள அவரது வீடு மற்றும் சென்னையில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் மத்திய குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டிருந்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அவர் தொடர்புடைய இடங்களிலும் இந்த சோதனை நீடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. மாவட்ட எஸ்.பி. மீது வழக்குப்பதிவு.. காவல்துறையில் பெரும் பரபரப்பு!

Follow Us