AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சவுக்கு சங்கருக்கு மீண்டும் சிறைவாசம்.. 3 ஆண்டுகள் தண்டனை.. எழும்பூர் நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு!

YouTuber Savukku Shankar 3 Years Prison : தமிழகத்தில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து எழும்பூர் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தனியார் செய்தி வாசிப்பாளர் தொடர்ந்த வழக்கில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சவுக்கு சங்கருக்கு மீண்டும் சிறைவாசம்.. 3 ஆண்டுகள் தண்டனை.. எழும்பூர் நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு!
சவுக்கு சங்கர்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 29 Sep 2026 20:42 PM IST

தமிழகத்தில் பிரபல யூடியூபரான சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் தொடர்ந்த இந்த வழக்கில் நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்துள்ளது. தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணிபுரிந்து வருபவர் மகாலட்சுமி. இவர் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசி அதனை வீடியோவாக பதிவு செய்து தனது யூடியூப் சேனலில் சவுக்கு சங்கர் பதிவேற்றம் செய்திருந்தார். இது தொடர்பாக, அந்த பெண் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி சிவசக்தி இன்று செவ்வாய்க்கிழமை ( செப்டம்பர் 29- ஆம் தேதி) தீர்ப்பளித்தார். இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக 30 நாட்கள் சவுக்கு சங்கருக்கு கால அவகாசம் வழங்குவதாக தனது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சவுக்கு சங்கர் என்பவர் யார்

பிரபல யூடியூபராக இருந்து வரும் சவுக்கு சங்கர் தனது யூடியூப் சேனல்களில் பல்வேறு அரசியல் விஷயங்கள் உள்ளிட்டவை குறித்து பேசி தினமும் வீடியோவாக பதிவேற்றம் செய்து வருகிறார். கடந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் போது, அரசுக்கு எதிராகவும், காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வீடியோவாக பேசி பதிவு செய்துள்ளார். இதை தொடர்ந்து, அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

மேலும் படிக்க: தவெக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு.. எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சால் ஷாக்.. குபீரென கைத்தட்டி சிரித்த சத்யபாமா!

சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்பு சட்டம் ரத்து

அதன்படி, அவர் மீது குண்டர் சட்டமும் பதிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக அவர் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர், தன் மீது பதியப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவர் மீதான குண்டர் சட்டத்தை கடந்த மே மாதம் ரத்து செய்து உத்தரவிட்டது. அதன்படி, சிறையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

தனியார் செய்தி வாசிப்பாளர் குறித்து அவதூறு வீடியோ

இந்த நிலையில் தான் தனியார் செய்தி வாசிப்பாளர் குறித்து அவதூறாக பேசியதாக எழும்பூரில் உள்ள நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை பல நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், யூடியூபர் சவுக்கு சங்கர் குற்றவாளி என தீர்ப்பளித்ததுடன், 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: தாராபுரம் மக்களை சாந்தப்படுத்த.. “எனக்கு வேற வழி தெரியல ஆத்தா” வேட்பாளர் சத்யபாமா எடுத்த டெக்னிக்!

Follow Us