AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

டாஸ்மாக் கடைகள் இனி வேற லெவல்.. மாதம் ரூ.5000 ஒதுக்கிய தமிழக அரசு.. எதற்காக தெரியுமா?

TASMAC Maintenance Allowance : தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மாதம் தோறும் ரூ. 3 ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரம் வரை பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியா கி உள்ளது .

டாஸ்மாக் கடைகள் இனி வேற லெவல்.. மாதம் ரூ.5000 ஒதுக்கிய தமிழக அரசு.. எதற்காக தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 29 Sep 2026 15:32 PM IST

தமிழகம் முழுவதும் சுமார் 4,048 அரசு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் சுமார் 18,000- க்கும் மேற்பட்ட மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இதில், பெரும்பாலான கடைகளில் மது பாட்டிலுக்கு விற்பனை விலையை விட ரூ. 10 முதல் ரூ. 20 கூடுதலாக வழங்கப்படுவதாக புகார் எழுந்த வண்ணமாக இருந்து வருகிறது. இதனால், சில டாஸ்மாக் கடைகளில் விற்பனையாளர்களுக்கும், மது பிரியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. மது பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூலிப்பது தொடர்பாக எதிர்க்கட்சிகளும் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றன. இந்த தொகையானது டாஸ்மாக் கடையின் அனைத்து பராமரிப்பு செலவுகளை மேற்கொள்வதற்காக வசூலிக்கப்படுவதாக தகவல் வெளியாகியிருந்தது.

டாஸ்மாக் கடைகளுக்கு ரூ. 5 ஆயிரம் வரை பராமரிப்பு தொகை

இந்த நிலையில், இதனை தடுக்கும் வகையில் தமிழகத்தில் செயல்படும் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் மாதம் தோறும் ரூ. 5 ஆயிரம் பராமரிப்பு தொகை வழங்கப்பட இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த தொகையானது அக்டோபர் 1- ஆம் தேதி ( வியாழக்கிழமை) முதல் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம், மாநகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளுக்கு மாதம் ரூ. 5 ஆயிரம், நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளுக்கு ரூ. 4 ஆயிரம்.

மேலும் படிக்க: நெல்லையை உலுக்கிய பயங்கரம்.. ஒரே நாளில் 2 கொலைகள்.. ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த சோகம்!

பராமரிப்பு தொகை எதற்காக வழங்கப்படுகிறது

ஊரக பகுதிகளில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளுக்கு ரூ. 3 ஆயிரம் பராமரிப்பு தொகையாக வழங்கப்பட உள்ளது. டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பராமரிப்பு தொகை மூலம், டாஸ்மாக் கடைகளை தினசரி சுத்தம் செய்வது, தூய்மை பணியாளர்களை நியமனம் செய்வது உள்ளிட்ட பணிகளுக்காக இந்த தொகையை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாதம் தோறும் ரூ. 1 கோடியை 48 லட்சம் ஒதுக்கீடு

அதுமட்டுமின்றி, அரசு வழங்கும் பராமரிப்பு தொகையை மின் கட்டணம் செலுத்துவதற்கோ, கட்டிட பழுது பார்ப்பு பணிகளுக்கோ அல்லது வேறு ஏதேனும் பயன்பாடுகளுக்கோ பயன்படுத்தக் கூடாது என டாஸ்மாக் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. அக்டோபர் மாதத்துக்கான பராமரிப்பு தொகை செப்டம்பர் மாத ஊதியத்துடன் டாஸ்மாக் பணியாளர்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இதன் மூலம் மாதம் தோறும் ரூ. 1.48 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய உள்ளது.

மேலும் படிக்க: தமிழகத்தில் கொத்துக் கொத்தாக கொலைகள்.. முதல்வர் மிக்சர் சாப்பிடுவதை நிறுத்துக.. கடும் நடவடிக்கை எடுத்திடுக.. உதயநிதி அதிரடி அட்டாக்!

Follow Us