AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

முதல்வர் விஜய்க்காக கணவன்- மகனுக்கு மொட்டை.. நேர்த்திக்கடன் செலுத்திய தீவிரமான பெண் விசிறி.. மதுரையில் நெகிழ்ச்சி!

Chief Minister Joseph Vijay : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் முதல் அமைச்சர் ஆனதற்காக தனது கணவர் மற்றும் மகனுக்கு மொட்டை அடித்து நேர்த்திக் கடனை செலுத்தியதாக அவரின் தீவிர ரசிகை ஒருவர் தெரிவித்து உள்ளார் .

முதல்வர் விஜய்க்காக கணவன்- மகனுக்கு மொட்டை.. நேர்த்திக்கடன் செலுத்திய தீவிரமான பெண் விசிறி.. மதுரையில் நெகிழ்ச்சி!
முதல்வர் விஜய்க்காக நேர்த்திக்கடன்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 28 Sep 2026 21:51 PM IST

தமிழகத்தில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை மதுரையில் முதல்வர் ஜோசப் ஜெய் இன்று திங்கள்கிழமை ( செப்டம்பர் 28- ஆம் தேதி) தொடங்கி வைத்தார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முதல்வர் விஜயை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வருகை தந்திருந்தனர். இதில், பெண் ஒருவர் செய்தியாளர்களிடம் நெகிழ்ச்சியான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், அந்த பெண் கூறி இருப்பதாவது: நான் 8 வயதாக இருந்த போதே விஜயை நேரில் பார்க்க வேண்டும் என்பது மிகப்பெரிய வாழ்நாள் கனவாக இருந்து வந்தது. அவர் தற்போது தமிழகத்தின் முதல் அமைச்சராக அரியணை ஏறி உள்ளார். அவர் முதல்வர் ஆக வேண்டும் என்று எனது கணவருக்கும், எனது மகனுக்கும் மொட்டை அடிப்பதாக நேர்த்திக்கடன் நேர்ந்திருந்தேன்.

கணவன் மற்றும் மகனுக்கு மொட்டையடித்து நேர்த்திக்கடன்

தற்போது, தமிழகத்தின் முதல்வராக ஜோசப் விஜய் வந்திருப்பதால், தற்போது எனது கணவர் மற்றும் மகனுக்கு மொட்டை அடிக்கப்பட்டு நேர்த்திக்கடன் செலுத்தி உள்ளேன் என்று கண்ணீர் மல்க நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இதை அங்கு திரண்டிருந்த மக்கள் பூரிப்பாக பார்த்தனர். தமிழகத்தில் தாய்மாமன் என்ற உன்னதமான உறவுக்கு பெயர் போன மண் நமது மதுரை மண் ஆகும். இதன் காரணமாகவே, இந்த வரலாற்று சிறப்புமிக்க தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் ஜோசப் விஜய் மதுரையில் தொடங்கி வைத்துள்ளார்.

மேலும் படிக்க: மதுராந்தகம்- தாராபுரம் இடைத்தேர்தல்.. 2,094 தபால் வாக்குகள் பதிவு.. தேர்தல் அலுவலர்கள் தகவல்!

தவெக அரசுக்கு போதிய அவகாசம் வழங்க வேண்டும்

இந்த அற்புதமான நிகழ்வு மதுரை மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை என்று தெரிவித்து பெருமிதம் கொண்டார். தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழக அரசுக்கு மக்கள் போதிய கால அவகாசம் வழங்க வேண்டும். முதல்- அமைச்சர் ஜோசப் விஜய் மக்கள் முன் வைத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றி தருவார். அவர் தமிழகத்தின் முதல்- அமைச்சராக பொறுப்பேற்று வெறும் 4 மாதங்களே ஆகிறது. ஆரம்ப கட்டத்திலேயே அனைத்தையும் செய்ய வேண்டும் என்று தமிழக மக்கள் அவசரப்படக்கூடாது.

உருக்கமான கோரிக்கை வைத்த பெண்

அரசுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும். முக்கியமாக தமிழக மக்கள் பொறுமை காக்க வேண்டும் என்று அந்த பெண் உருக்கமாக கேட்டுக் கொண்டார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் தமிழகத்தின் முதல்வராக வரவேண்டும் என்று அந்த கட்சியை சார்ந்தவர்கள் பெரும் ஆவலோடு எதிர்பார்த்த நிலையில், அவர் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சியை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: “தம்பி ஆதவ் அர்ஜூனா” விரைவில் பதவி விலக வேண்டி வரும்.. மதுராந்தகத்தில் பிரேமலதா விஜயகாந்த் அட்டாக்!

Follow Us