பரபரக்கும் ஜெம் வீரமணி விவகாரம்.. அடுத்தடுத்து பாயும் போக்சோ வழக்குகள்.. எஸ்.ஐ.டி. குழு முக்கிய அறிவுறுத்தல்!
Gem Veeramani POCSO Case : ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொண்ட 16 வயது சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .
தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வரும் ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 13- க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெம் வீரமணி மற்றும் அவர்கள் உடந்தையாக இருந்ததாக உதவியாளர் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன், மற்றொரு உதவியாளர் கணேசன் ஆகியோரை மத்திய குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில், நாளுக்கு நாள் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில், ஜெம் வீரமணி கடந்த 2004- ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை வழங்குவதாக 16 வயது சிறுமியை அழைத்து பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதில், அந்த சிறுமி தற்கொலை செய்து கொண்டார்.
ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு
இது தொடர்பாக அந்த சிறுமியின் தாய் சுமார் 12 ஆண்டுகள் கழித்து தற்போது புகார் அளித்துள்ள நிலையில், அந்த புகாரின் அடிப்படையில், ஜெம் வீரமணி மீது சென்னை மத்திய குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் மேலும் ஒரு போக்சோ வழக்கை பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், ஜெம் வீரமணியால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் தயக்கம், அச்சம் இன்றி தாராளமாக சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் புகார் அளிக்கலாம். அவ்வாறு புகார் அளிக்கும் நபர்களின் விவரங்கள் பாதுகாக்கப்படும் என்று சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக 9395319676- என்ற செல்போன் எண்ணையும் எஸ். ஐ. டி. குழு வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க: பல்கலைக்கழக பேராசிரியர் அதிரடி சஸ்பெண்ட்.. மாணவியிடம் இப்படி பேசலாமா? பதிவாளர் எடுத்த கடும் நடவடிக்கை!
சிறுமிகளை ஜெம் வீரமணி வன்கொடுமை செய்த வீடியோ
அண்மையில், ஜெம் வீரமணி தொடர்புடைய வீடு மற்றும் அலுவலகங்களில் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டிருந்தனர். இதில், கைப்பற்றப்பட்ட செல்போன்கள், டிஜிட்டல் ஆவணங்களில் சிறுமிகளுடன் அரைகுறை ஆடையுடன் வீரமணி இருந்த வீடியோக்கள் கைப்பற்றப்பட்டிருந்தன. இந்த விவகாரம் பூதாகாரம் ஆன நிலையில், சிறுமிகளை வன்கொடுமை செய்யும் வீரமணியின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது.
ஜெம் வீரமணி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை
இதனிடையே, ஜெம் வீரமணி மற்றும் அவரது மகன் சித்தார்த் ஆகியோரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கைதாவதற்கு முன்பு சாந்தி பதிவு செய்திருந்த வீடியோவும் வெளியாகி இருந்தது. இவ்வாறாக நாளுக்கு நாள் வீரமணி வழக்கில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த வழக்கில் விரைவில் அமலாக்கத்துறையில் விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
மேலும் படிக்க: கேரளத்தில் வியாபாரியை கத்தியால் குத்திய தமிழக நபர்.. லாட்டரியில் பரிசு விழாத ஆத்திரத்தில் வெறிச்செயல்!