AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கேரளத்தில் வியாபாரியை கத்தியால் குத்திய தமிழக நபர்.. லாட்டரியில் பரிசு விழாத ஆத்திரத்தில் வெறிச்செயல்!

Kerala Crime : கேரள மாநிலத்தில் லாட்டரி சீட்டில் பரிசு விழாத ஆத்திரத்தில் பெண் வியாபாரியை தமிழகத்தை சேர்ந்த ஒருவர் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில், அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளத்தில் வியாபாரியை கத்தியால் குத்திய தமிழக நபர்.. லாட்டரியில் பரிசு விழாத ஆத்திரத்தில் வெறிச்செயல்!
கேரளத்தில் கைதான தமிழக நபர்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 28 Sep 2026 15:57 PM IST

தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தமிழக அரசு ஏற்கனவே தடை விதித்துள்ளது. ஆனால், நமது அண்டை மாநிலமான கேரளத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு அந்த மாநில அரசு தடை எதுவும் விதிக்கவில்லை. இதன் காரணமாக, கேரள மாநிலத்தில் அரசே லாட்டரி சீட்டு விற்பனையை நடத்தி வருகிறது. இதனால், கேரள லாட்டரி சீட்டுகளை எல்லைப் பகுதியில் உள்ள தமிழர்கள் பலரும் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதே போல, கேரள மாநிலத்துக்கு சுற்றுலா உள்ளிட்ட காரணங்களுக்காக செல்லும் தமிழர்களும் லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து பயன்படுத்துகின்றனர். அதன்படி, நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள பாட்டவயல் பகுதியை சேர்ந்த சிவக்குமார் ( 42 வயது) என்பவர் கேரள மாநிலம், வயநாடு பகுதியில் உள்ள ஒரு கடையில் ஓணம் பம்பர் லாட்டரி சீட்டு வாங்கி வந்துள்ளார்.

லாட்டரி வியாபாரியிடம் கடும் வாக்குவாதம்

அதில், தனக்கு உறுதியாக பம்பர் பரிசு கிடைக்கும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் இருந்து வந்த நிலையில், அவருக்கு எந்த விதமான பரிசும் கிடைக்கவில்லை. இதில், கடும் ஏமாற்றத்தை சந்தித்த சிவகுமாருக்கு, அந்த லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த வியாபாரி மீது கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக, வயநாடு, நென்மேனி பகுதிக்கு சென்ற அவர், லாட்டரி சீட்டு விற்பனை செய்த வியாபாரி வினிதா ( 32 வயது) என்பவரிடம் பரிசு விழாதது குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் படிக்க: திண்டுக்கல்லில் சினிமா பாணியில் சம்பவம்.. ரத்த களறியில் இளைஞர் மீட்பு.. கொலை வெறி கும்பலை கூண்டோடு தூக்கிய தனிப்படை!

வியாபாரியை சரமாரியாக குத்திய நபர்

இதில், அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வினிதாவை சரமாரியாக சிவக்குமார் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதில், தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டு காயம் அடைந்த வினிதா ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார். இந்த சம்பவத்தை அறிந்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகி உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழக நபரை கைது செய்த போலீசார்

இந்த சம்பவம் தொடர்பாக வினிதாவின் குடும்பத்தினர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, தப்பி ஓடிய சிவகுமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். லாட்டரியில் பரிசு இல்லாத ஆத்திரத்தில் வியாபாரியை கத்தியால் குத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: பல்கலைக்கழக பேராசிரியர் அதிரடி சஸ்பெண்ட்.. மாணவியிடம் இப்படி பேசலாமா? பதிவாளர் எடுத்த கடும் நடவடிக்கை!

Follow Us