AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திண்டுக்கல்லில் சினிமா பாணியில் சம்பவம்.. ரத்த களறியில் இளைஞர் மீட்பு.. கொலை வெறி கும்பலை கூண்டோடு தூக்கிய தனிப்படை!

Dindigul Crime : திண்டுக்கல் மாவட்டத்தில் நடு ரோட்டில் இளைஞரை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிய கொடூர சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரை சாணார்ப்பட்டி போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில், தொடர்புடைய மற்றொருவரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

திண்டுக்கல்லில் சினிமா பாணியில் சம்பவம்.. ரத்த களறியில் இளைஞர் மீட்பு.. கொலை வெறி கும்பலை கூண்டோடு தூக்கிய தனிப்படை!
மாதிரிப் படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 28 Sep 2026 14:44 PM IST

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி வட்டம், கோபால்பட்டி அருகே உள்ள கணவாய்பட்டி பங்களா பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகன் லோகநாதன் ( 22 வயது). தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வரும் இவர், கோபால்பட்டி டாஸ்மாக் கடை அருகே உள்ள பகுதியில் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மஞ்ச நாயக்கன் பட்டியை சேர்ந்த தாமரை கண்ணன் ( 21 வயது) என்பவருடன் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், இருவர் இடையே தகராறு முற்றிய நிலையில் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கியுள்ளனர். ஆத்திரம் அடங்காத தாமரை கண்ணன் தனது நண்பர்களை சம்பவ இடத்திற்கு வரவழைத்துள்ளார். இதே போல, லோகநாதனும் தனது நண்பரை சம்பவ இடத்திற்கு அழைத்துள்ளார்.

இரு தரப்பினர் இடையே கடுமையான மோதல்

இதில், இரு தரப்பினர்கள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த தாமரைக்கண்ணன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் லோகநாதன் மற்றும் அவரது நண்பர்களான அன்புக்கரசன் ( 25 வயது) ஆகிய 2 பேரை சரமாரியாக வெட்டினார். இதில், இருவருக்கும் தலை மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் இரு தரப்பினரையும் சமரசம் செய்து விலக்கி விட்டதுடன், அரிவாள் வெட்டில் காயம் அடைந்த இருவரையும் மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க: திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் சோகம்.. நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்.. ஒருவர் பலி, மற்றொருவர் நிலை என்ன?

இளைஞரை அரிவாளால் வெட்டி கும்பல்

இதில், அன்புக்கரசன் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த சாணார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்ற நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் அடிப்படையில், உதவி காவல் கண்காணிப்பாளர் மஞ்சிமா மேற்பார்வையில் சாணார்பட்டி காவல் ஆய்வாளர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

7 பேரை தட்டி தூக்கிய தனிப்படை போலீசார்

இதில், தாமரைக்கண்ணன் மற்றும் அவரது நண்பர்களான இந்திரா நகரை சேர்ந்த சுரேஷ் என்ற மைதா ( 29 வயது), பள்ளப்பட்டியை சேர்ந்த கணேசமூர்த்தி ( 22 வயது), புதுப் பட்டியை சேர்ந்த வீரமணி ( 25 வயது), அசாருதீன் ( 36 வயது), சரவணன் ( 25 வயது) உள்ளிட்ட 7 பேரை சாணார்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் தொடர்புடைய அமர் என்ற அஷ்ரப்தீனை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க: மதுரையில் முதல்வர் விஜய்யை பார்க்க வந்த 3க்கும் மேற்பட்டோர் மயக்கம்? வெளியான பரபரப்பு தகவல்

Follow Us