AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் சோகம்.. நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்.. ஒருவர் பலி, மற்றொருவர் நிலை என்ன?

Cauvery River Drowning Incident: திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை குளித்தபோது நீரில் மூழ்கிய பார்த்தசாரதி என்ற இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நீரில் அடித்துச் செல்லப்பட்ட ஹரி கோகுல் என்ற மற்றொரு இளைஞரைத் தீயணைப்பு வீரர்கள் விசைப்படகு மூலம் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விடுமுறை நாளில் நேர்ந்த இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் சோகம்.. நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்.. ஒருவர் பலி, மற்றொருவர் நிலை என்ன?
காவிரி ஆறு
Deepan
Deepan | Updated On: 28 Sep 2026 14:16 PM IST

திருச்சி, செப்.28: திருச்சி மாவட்டத்தில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான முக்கொம்பு பகுதியில் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வார விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையன்று நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தைக் கழிக்க வந்த இடத்தில், எதிர்பாராதவிதமாக ஆற்றின் சுழலிலும் ஆழமான பகுதியிலும் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், நீரில் அடித்துச் செல்லப்பட்ட மற்றொரு இளைஞரைக் கண்டுபிடிக்கும் பணிகளில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: “சினிமாவை மிஞ்சும் த்ரில் சேஸிங்!”.. காரின் மேற்கூரையில் தொங்கியபடி 40 கி.மீ பயணம் செய்த தலைமை காவலர்.. கோவையில் ஷாக் சம்பவம்!

ஆற்றின் ஆழமான பகுதியில் சிக்கிய இளைஞர்கள்:

திருச்சியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ஒன்றில் ஏசி மெக்கானிக்காகப் பணிபுரிந்து வரும் 10 இளைஞர்கள், ஞாயிற்றுக்கிழமை விடுமுறையைக் கொண்டாடுவதற்காக முக்கொம்பு சுற்றுலாத் தளத்திற்கு வந்துள்ளனர். அங்குள்ள நடுங்கரை காவிரி ஆற்றில், 39 கட்டை பகுதிக்கு அருகே திருச்சி முருங்கைப்பேட்டையைச் சேர்ந்த பார்த்தசாரதி (20), மண்ணச்சநல்லூர் ராசாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஹரி கோகுல் (18), யாமின் உள்ளிட்ட நான்கு பேர் ஆற்றில் இறங்கிக் குளித்துள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக அவர்கள் ஆற்றின் அதிக ஆழம் உள்ள பகுதிக்குச் சென்றதால், பார்த்தசாரதி, ஹரி கோகுல் மற்றும் யாமின் ஆகிய மூவரும் நீரோட்டத்தில் சிக்கி நீரில் மூழ்கத் தொடங்கியுள்ளனர்.

நண்பர்களின் மீட்பு முயற்சியும் சடலம் மீட்பும்:

இளைஞர்கள் நீரில் மூழ்கித் தவிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கரையில் இருந்த அவர்களது நண்பர்கள் உடனடியாக ஆற்றில் இறங்கி அவர்களைக் காப்பாற்ற முயன்றனர். இந்த தீவிர முயற்சியில் யாமின் என்ற இளைஞர் மட்டும் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், பார்த்தசாரதி மற்றும் ஹரி கோகுல் ஆகிய இருவராலும் கரையேற முடியாமல் நீரோட்டத்தில் மூழ்கினர். இதுகுறித்து உடனடியாக வாத்தலை காவல் துறைக்கும், ஸ்ரீரங்கம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர், தேடுதல் பணிக்காகக் காவிரி ஆற்றில் நீர்வரத்தைக் குறைத்தும், மதகுகளை அடைத்தும் தீவிரமாகத் தேடினர். இதில் பார்த்தசாரதி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதையும் படிக்க: கழுத்து நிறைய நகை.. கட்டுக்கட்டாக பணம்.. இன்ஸ்டாவில் ரீல்ஸ்.. அனைத்தும் க்ளோஸ்.. நாகர்கோவிலில் அதிர்ச்சி சம்பவம்!

இரண்டாவது நாளாகத் தொடரும் தேடுதல் பணி:

நீரில் மூழ்கிய மற்றொரு இளைஞரான ஹரி கோகுலை தீயணைப்பு வீரர்கள் மாலை வரை தீவிரமாகத் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. போதிய வெளிச்சமின்மை காரணமாக ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில் தேடுதல் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இன்று திங்கள்கிழமை காலையில் மீண்டும் விசைப்படகு மற்றும் நவீன உபகரணங்களின் உதவியோடு தீயணைப்பு வீரர்கள் ஹரி கோகுலைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக வாத்தலை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விடுமுறை நாளில் சுற்றுலா வந்த இடத்தில் இளைஞர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us