AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கழுத்து நிறைய நகை.. கட்டுக்கட்டாக பணம்.. இன்ஸ்டாவில் ரீல்ஸ்.. அனைத்தும் க்ளோஸ்.. நாகர்கோவிலில் அதிர்ச்சி சம்பவம்!

Nagercoil Rs.1 Crore Jewelry Stolen : நாகர்கோவிலில் கழுத்து நிறைய நகையுடன், பெட்டில் கட்டுக்கட்டாக பணத்துடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்ட பெண்ணின் வீட்டில் ரூ. 1 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள், பணத்தை மர்ம நபர் கொள்ளை அடித்து சென்றனர்.

கழுத்து நிறைய நகை.. கட்டுக்கட்டாக பணம்.. இன்ஸ்டாவில் ரீல்ஸ்.. அனைத்தும் க்ளோஸ்.. நாகர்கோவிலில் அதிர்ச்சி சம்பவம்!
இன்ஸ்டாவில் ரீல்ஸ் வெளியிட்ட பெண்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 25 Sep 2026 15:13 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள தம்மத்துகோணம் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் ( 36 வயது). இவர், ஏலக்காய் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி மதுமிதா ( 29 வயது). சமூக வலைதளங்களில் மிகவும் ஈடுபாடு கொண்ட இவர் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் தினந்தோறும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவேற்றி வருவது வழக்கமாகும். சோசியல் மீடியாவில் மிகவும் பிரபலமான இவரது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களுக்கு அதிகளவு லைக்குகள் கிடைக்குமாம். இதனால், கூடுதலாக லைக்குகள் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட மதுமிதா, தான் வாங்கும் புதிய தங்க நகைகள் மற்றும் வீட்டில் இருக்கும் பணம் மற்றும் எங்கு செல்கிறோம் என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபில் ரிலீஸ் ஆக பதிவேற்றி உள்ளார்.

நகைகளை அணிந்து பணத்துடன் ரீல்ஸ்

இதற்கு அதிக லைக்குகள் கிடைத்த நிலையில், அதில் மயங்கிய மதுமிதா அந்த நகைகளை அணிந்து கொண்டும், கட்டு கட்டாக பணத்தை மெத்தையில் அள்ளிப் போட்டுக் கொண்டும் மதுமிதா சினிமா பாடலுக்கு டான்ஸ் ஆடி அதனை ரிலீஸ் ஆக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோக்களையும், அவரது நடவடிக்கைகளையும் இன்ஸ்டாகிராம் மூலமாக மர்ம நபர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். அதன்படி, இவர்கள் இருப்பிடத்தை அறிந்த அந்த கும்பல் இவர்கள் வெளியே சென்ற நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றது.

மேலும் படிக்க: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு.. சிபிஐ அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. நீதிமன்றம் அதிரடி!!

ரூ. 1 கோடி மதிப்பிலான தங்க நகை, வைர நகை கொள்ளை

அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 120 பவுன் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள், ரூ. 50 ஆயிரம் ரொக்கம் என அனைத்தையும் கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றது. இதன் மதிப்பு ரூ. 1 கோடி என கூறப்படுகிறது. இந்த நிலையில், குடும்பத்துடன் வெளியே சென்ற மதுமிதா வீடு திரும்பிய நிலையில், பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக, தகவல் அறிந்த சுசீந்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

3 தனிப்படைகள் அமைத்து கொள்ள கும்பல் தேடுதல் வேட்டை

தொடர்ந்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், மதுமிதா சமூக வலைதளங்களில் வெளியிட்ட ரீல்ஸ் அடிப்படையிலேயே, இந்த துணிகர கொள்ளை சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ரூ. 25 கோடி தர தயார்? தவெக எம்எல்ஏக்களை விலை பேச முயன்றார் எடப்பாடி பழனிசாமி.. அமைச்சர் அருண்ராஜ் பெரும் குற்றச்சாட்டு!

Follow Us