AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பெரிய ரவுடியா நீ? தவெக-னா பயந்துவிடுவார்களா ?” – த.வெ.க நிர்வாகியை வெளுத்து வாங்கும் பெண் – வீடியோ வைரல்!

Coimbatore TVK Functionary Controversy : கோவை, தொண்டாமுத்தூர் அருகே இருசக்கர வாகன ஷோரூமிற்குள் புகுந்து வாகனங்களைத் தள்ளிவிட்டு ரகளையில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் நகரச் செயலாளரை, அந்த ஷோரூமின் பெண் உரிமையாளர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பி விரட்டியடிக்கும் செல்போன் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

Sekaran S
Sekaran S | Updated On: 15 Nov 2026 19:10 PM IST

​கோயம்புத்தூர், நவம்பர் 15 : கோவை, (Coimbatore) தொண்டாமுத்தூர் அருகே இருசக்கர வாகன ஷோரூமிற்குள் புகுந்து வாகனங்களைத் தள்ளிவிட்டு ரகளையில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் நகரச் செயலாளரை, அந்த ஷோரூமின் பெண் உரிமையாளர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பி விரட்டியடிக்கும் செல்போன் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

த.வெ.க நிர்வாகியை வெளுத்து வாங்கும் பெண்

கோவை, தொண்டாமுத்தூர் அடுத்து உள்ள கலிங்கநாயக்கன்பாளையம் பகுதியில் ‘ஏ.என்.எஸ் (ANS)’ என்ற பெயரில் இருசக்கர வாகன விற்பனை மற்றும் பழுது நீக்கும் ஷோரூம் இயங்கி வருகிறது. இந்த ஷோரூமின் உரிமையாளர், தமிழக வெற்றிக் கழகத்தின் நகரச் செயலாளராக இருக்கும் பிரகாஷ் என்பவருக்கு, அக்கட்சியில் இளைஞர் அணிப் பொறுப்பு வாங்கித் தருவதாகக் கூறி ஒரு இருசக்கர வாகனம் மற்றும் ரூ. 1 லட்சம் பணம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க : மதுரை நகைக்கடை கொள்ளை.. இன்ஸ்டா பிரபலம் மீனாட்சியின் வாக்குமூலத்தால் அடுத்தடுத்த திருப்பம்.. தலைமறைவான நிஷாந்தை தேடும் தனிப்படைகள்!!

இந்த விவகாரம் தொடர்பாக, த.வெ.க நகரப் பொறுப்பாளர் பிரகாஷ் கலிங்கநாயக்கன்பாளையத்தில் உள்ள அந்த ஷோரூமிற்குச் சென்று உள்ளார். அப்போது அங்கு உரிமையாளர் இல்லாத நிலையில், அங்கு இருந்த உரிமையாளரின் மனைவியிடம் பிரகாஷ் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், ஷோரூமில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனத்தைத் தள்ளிவிட்டு ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

வைரலாகும் வீடியோ

இதனால் ஆத்திரம் அடைந்த ஷோரூமின் பெண் உரிமையாளர், பிரகாஷின் செயலைத் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்தபடியே அவரைச் சரமாரியாகக் கேள்வி எழுப்பி உள்ளார். இணையத்தில் வேகமாகப் பரவி வரும் அந்த வீடியோவில் அவர் பேசும் போது, “பெரிய ரவுடியா நீ? உன் திமிரு, தெனாவெட்டு எல்லாம் வெளியே வச்சுக்கோ. நீ தவெக கட்சினா பயந்துவிடுவார்களா ? நீ ஷோரூமுக்குள்ள வந்து வண்டியை எதுக்குத் தொடுற ? ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கி இருக்க நீ… பொம்பளை கிட்ட வந்து வீரத்தைக் காட்டுறியா ? வெளியே போ… வெளியே போ. இவன் லஞ்சம் வாங்கியிருக்கான், நான் ஆதாரத்தோடு நிரூபிப்பேன்” என அவர் ஆவேசமாகக் குரல் எழுப்பி பிரகாஷை ஷோரூமில் இருந்து வெளியேற்றும் காட்சிகள் பதிவாகி உள்ளன.

இதையும் படிக்க : திண்டுக்கல்லில் நடுரோட்டில் கொட்டிய 25,000 லிட்டர் ஆசிட்.. லாரி விபத்தால் ஏற்பட்ட கடுமையான புகைமூட்டம்.. பரபரப்பு!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் காரமடை த.வெ.க ஒன்றிய செயலாளர் மீது அக்கட்சியின் பெண் நிர்வாகியே பாலியல் மற்றும் சாதி வன்கொடுமைப் புகார் அளித்து இருந்த நிலையில், தற்போது தொண்டாமுத்தூர் பகுதியில் த.வெ.க நிர்வாகி ஒருவர் ஷோரூமில் ரகளையில் ஈடுபட்டதாகவும், கட்சிப் பதவிக்காகப் பணம் கைமாறியதாகவும் கூறப்படும் வீடியோ வெளியாகி கோவை அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow Us