மாறுதலான எவிக்ஷன்.. கார் மூலமாக பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நபர் யார்? – ப்ரோமோ இதோ!
Bigg Boss Season 10 Eviction: பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தமிழில் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. 10வது வாரத்தின் இறுதியில் உள்ள நிலையில், டபுள் எவிக்ஷன் உள்ளது. ஏற்கனவே முத்தழகி வெளியேறிய நிலையில், தன்யா மற்றும் அவினாஷ் இருவரும் மீதம் உள்ளனர். இவர்கள் இருவரில் ஒருவர் கார் மூலமாக இந்த பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அது யார் என விவரமாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது கிட்டத்தட்ட 70 நாட்களுக்கும் மேல் சிறப்பாக ஒளிபரப்பாகிவருகிறது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுப்பாளராக தொகுத்துவரும் நிலையில், மக்கள் மத்தியில் ஈர்க்கப்பட்டுவருகிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போது மொத்தமே 12 போட்டியாளர்கள் உள்ளனர். கடந்த வாரத்தில் டபுள் எவிக்ஷன் மூலமாக அக்ஷிதா மற்றும் அஸ்மிதா என இரு போட்டியாளர்கள் வெளியேறினார். அந்த விதத்தில் இந்த வாரத்தில் எவிக்ஷன் இருக்காது அல்லது ஒரு எவிக்ஷன் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த வாரத்திலும் பிக் பாஸ் சீசன் 10 வீட்டில் டபுள் எவிக்ஷன் நடந்துள்ளது. முத்தழகி (Muthazhagi) குறைந்த வாக்குகள் எண்ணிக்கையின்படி இந்த நிகழ்ச்சியிலிலிருந்து இந்த வாரத்தில் வெளியேற்றப்பட்டுள்ளார்.
அந்த விதத்தில் 11 போட்டியாளர்கள் மீதம் இருந்த நிலையில், அதில் தன்யா மற்றும் அவினாஷ் இருவருமே எவிக்ஷன் லிஸ்டில் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில் தற்போது இந்த இருவரில் யார் வெளியேறுவரை என புதிய எவிக்ஷன் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: ஜோ பட இயக்குநரின் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது?
கார் மூலம் பிக் பாஸ் வீட்டில் நடந்த மற்றொரு எவிக்ஷன்:
இந்த வாரத்திலும் டபுள் எவிக்ஷன் நடந்துள்ள நிலையில், முத்தழகி முதலில் வெளியேற்றப்பட்டிருந்தார். அவரை தொடர்ந்து தன்யா மற்றும் அவினாஷ் இறுதியில் இருந்தனர். அந்த விதத்தில் இவர்கள் இருவரின் எவிக்ஷன் குறித்த ப்ரோமோ ஓன்று வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில், பிக் பாஸ் வீட்டில் எவிக்ஷன் லிஸ்ட்டில் மீதம் உள்ள தன்யா மற்றும் அவினாஷ் இருவருமே கார் ஒன்றில் ஏற்றப்படுவார்கள். இதில் காரில் ஏற்றப்பட்ட இரு நபர்களில் ஒருவர் வெளியேறிவிடுவார்.
இதையும் படிங்க: முற்றிலும் மாறுபட்டது…. ஓ.எம் படத்தில் ஸ்ரீலீலாவின் கதாபாத்திரம் எப்படி இருக்கும்? – ராஜ்குமார் பெரியசாமி பேச்சு!
மேலும் வெளியேறாத நபர் மீண்டும் காரின் மூலமாக பிக் பாஸ் வீட்டினுள் நுழைந்துவிடுவார் என கூறப்பட்டது. அந்த விதத்தில் தன்யா மற்றும் அவினாஷ் இருவருமே அந்த காரில் எரிய நிலையில், அதில் அவினாஷ் வெளியேற்றப்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவிவருகிறது. அதன்படி இந்த வாரத்தில் முத்தழகி மற்றும் அவினாஷ் என இரு போட்டியாளர்கள் டபுள் எவிக்ஷன் மூலம் எவிக்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 7வது நாளின் 4வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:
#Day70 #Promo4 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/G6KKjPp9PB
— Vijay Television (@vijaytelevision) November 15, 2026
கடந்த வாரத்தில் டபுள் எவிக்ஷன் இருந்த நிலையில், தற்போது இந்த வாரத்திலும் டபுள் எவிக்ஷன் நடைபெற்றுள்ளது. இதில் முத்தழகி மற்றும் அவினாஷ் இருவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் இந்த வராத்தில் ஜேசனை விஜய் சேதுபதி, அவரின் அநாகரிக செயல் மற்றும் திமிரு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். இது மீண்டும் நடந்தால் அவரை வெளியேற்றிவிடுவதாகவும் கூறியுள்ளார். அதன் காரணமாக ஜேசன் வெளியேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.