AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஜோ பட இயக்குநரின் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது?

GV Prakash New film First Look: தென்னிந்திய மொழிகளில் தேசிய விருந்து வென்ற இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்துவருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவரின் நடிப்பிலும், ஜோ பட இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கத்திலும் புது படமானது உருவாக்கப்பட்டவருகிறது. அந்த விதத்தில் இப்படத்தின் டைட்டி ஃபார்ட்ஸ் லுக் ரிலீஸ் குறித்த அப்டேட்டை படக்குழு பகிர்ந்துள்ளது.

ஜோ பட இயக்குநரின் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது?
ஜிவி பிரகாஷின் புதிய படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 15 Nov 2026 18:37 PM IST

தேசிய விருதுகளை வென்று, தென்னிந்திய சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்துவருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார் (GV. Prakash Kumar). இவர் சினிமாவில் வெறும் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல், படங்களில் நாயகனாகவும் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் 2026ம் ஆண்டில் இறுதியாக வெளியான திரைப்படம் இம்மார்ட்டல் (Immortal Movie). அறிமுக இயக்குநரின் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் நடிகை கயாடு லோஹருடன் (Kayadu Lohar) இணைந்து நடித்திருந்த. இப்படம் 2026ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியாகியிருந்த நிலையில், ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பிறகு பேக் டூ பேக் திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வந்தார். இவர் தற்போது இரு படங்களில் பிசியாக இருக்கிறார். செல்வராகவன் இயக்கத்தில் மெண்டல் மனதில் திரைப்படம், ஜோ பட இயக்குநரின் இயக்கத்தில்(Joe Movie Director) புதிய படம்.

இந்த இரு படங்களும் சிறப்பான காதல் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுவருகிறதாம். அந்த விதத்தில், இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில், விளையாட்டு தொடர்பான காதல் கதையில் படம் உருவாகிவருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பார்வை ரிலீஸ் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: என் அம்மா ஷாலினி மேமின் தீவிர ரசிகை… டேர் டெவில் படம் குறித்து பகிர்ந்த நடிகை ஸ்ரீலீலா!

தனது புதிய திரைப்படத்தின் முதல் பார்வை ரிலீஸ் குறித்து ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

 

இயக்குநர் ஹரிஹரன் ராம் மற்றும் ஜி.வி.பிரகாஷ் குமாரின் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் முதல் பார்வை, நாளை (16/11/2026) அன்று வெளியாகும் என ஜி.வி.பிரகாஷ் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோ பட இயக்குநர் மற்றும் ஜி.வி. பிரகாஷ் குமாரின் கூட்டணி பட கதை:

இந்த புதிய படத்தில் ஹீரோவாக நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்துவருகிறார். அவருக்கு ஜோடியாக ஆண்பாவம் பொல்லாதது மற்றும் ஜோ படத்தில் இணைந்து நடித்திருந்த நடிகை மாளவிகா மனோஜ் இணைந்து நடித்துள்ளார். இந்த படமானது சிறப்பான காதல் கதையில் உருவாகிறதாம். இந்த படத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் கல்லூரியில் படிக்கும், ஒரு கிரிக்கெட் விளையாட்டு வீரராக நடித்துள்ளாராம். மேலும் இப்படத்தில் நடிகை மாளவிகா மனோஜும் மிகவும் முக்கியமான வேடத்தில் நடித்துவருகிறார்.

இதையும் படிங்க: எச்சரித்த விஜய் சேதுபதி.. வீட்டை விட்டு வெளியேற வேண்டுகோள் வைத்த ஜேசன் – அனல் பறக்கும் பிக் பாஸ் ப்ரோமோ!

இப்படத்தை இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் பணியாற்றிவருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், இப்படத்தின் டைட்டில் லுக் ரிலீஸ் குறித்த அறிவிப்பும் வெளியாகிவிட்டது. அந்த விதத்தில் இப்படம் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us