என் அம்மா ஷாலினி மேமின் தீவிர ரசிகை… டேர் டெவில் படம் குறித்து பகிர்ந்த நடிகை ஸ்ரீலீலா!
Sreeleela About Dare devil Movie: திரையுலகில் இளம் நடிகையாக ரசிகர்களை கவர்ந்துவரும் நாயகியாக இருந்துவருபவ ஸ்ரீலீலா. இவரின் நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள புதிய திரைப்படம்தான் ஓ.எம். இவர் அஜித் குமாரின் டேர் டெவில் படத்திலும் நடிக்கும் நிலையில், அந்த படம் குறித்தும் மற்றும் ஷாலினி குறித்தும் அவர் பகிர்ந்துள்ளார்.
நடிகை ஸ்ரீலீலா (Actress Sreeleela) தென்னிந்திய சினிமாவில் இளம் கதாநாயகியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இறுதியாக இவரின் நடிப்பில் தமிழில் வெளியான திரைப்படம் பராசக்தி (Parasakthi Movie). இப்படமானது 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியான நிலையில், எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்த படத்திற்கு பிறகு இவர் தமிழில் நடித்துள்ள 2வது திரைப்படம்தான் ஓ.எம் (O.M Movie). இப்படத்தில் நடிகர் தனுஷின் (Dhanush) மனைவியாக இவர் நடித்துள்ளார். இப்படம் 2026 நவம்பர் 20ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது வெகு தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அந்த வரிசையில், இவர் அஜித் குமாரின் (Ajith Kumar) டேர் டெவில் திரைப்படத்தில் (Dare Devil Movie) அவருடன் இணைந்து நடிக்கிறார்.
சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் பூகைகள் நடந்த நிலையில், அதில் ஸ்ரீலீலா கலந்துகொண்டார். இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஸ்ரீலீலா, ஷாலினி மற்றும் டேர் டெவில் படம் குறித்த விஷயங்களை பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: இதெல்லாம் ஏன்ட வெச்சிக்காதிங்க.. விஜய் சேதுபதியிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட ஜேசன் – தீயாய் பரவும் ப்ரோமோ!
டேர் டெவில் திரைப்படம் மற்றும் ஷாலினி அஜித் குமார் குறித்து பேசிய ஸ்ரீலீலா:
அந்த பேட்டியில் பேசிய நடிகை ஸ்ரீலீலா, அதில் “நான் விரைவில் டேர் டெவில் ஷூட்டிங்கில் இணையவுள்ளேன். இப்படத்தின் கதை என்னிடம் கூறி ரொம்ப நாளாகிவிட்டது, ஆனால் இப்போது அது ஆரம்பமாகுவதில் எனக்கு மகிழ்ச்சி. எனது அம்மா, ஷாலினி மேமின் மிகப்பெரிய ரசிகை. அஜித் குமார் சாரும், ஷாலினி மேமும் ஒரு படத்தில் ஒன்றாக நடித்தால், மக்கள் அந்த கூட்டணி படத்திற்காகவே அம்மா காத்திருப்பார்கள்.
இதையும் படிங்க: நான் இத சொல்லியே ஆகனும், நீ அவ்வளவு அழகு… 18 ஆண்டுகளைக் கடந்தது சூர்யாவின் வாரணம் ஆயிரம் படம் – கொண்டாடும் ரசிகர்கள்!
அந்த நேரத்தில் ஷாலினி மேம், மிகவும் மதிப்புமிக்கவர்களாக இருந்தவர். தற்போது அவர் தயாரிப்பாளராக படத்தை தயாரிக்கிறார். டேர் டெவில் பட ஷூட்டிங் பூஜையின் போது, ஷாலினி மேம் மிகவும் அன்பாகப் பழகி, அனைவரும் சாப்பிடுவதை உறுதி பார்த்துக்கொண்டே இருந்தார். நான் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
டேர் டெவில் படத்தின் ஷூட்டிங் பூஜையின்போது எடுத்த போட்டோக்களை பகிர்ந்த ஸ்ரீலீலா:
View this post on Instagram
இந்த படத்தில் நடிகை ஸ்ரீலீலா நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடிக்கிறாரா? அல்லது மகளாக நடிக்கிறாரா ? என்பது குறித்த எந்த தகவலும் இல்லை. இதில் பிரபு, உன்னி முகுந்தன், சுனில் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடிக்கவுள்ள நிலையில், ஷூட்டிங் தொடங்கிவிட்டது. மேலும் இப்படம் 2027ம் ஆண்டு இறுதிக்குள் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.