சாதிகாவின் ஃபேவரடிசம்.. தாறுமாறாக கேள்வி கேட்ட விஜய் சேதுபதி – ப்ரோமோ இதோ!
Bigg Boss Tamil 10: தமிழில் விஜய் சேதுபதி தொகுத்துவரும் பிக் பாஸ் சீசன் 10. இந்த நிகழ்ச்சியானது தொடங்கி 10வது வாரத்தின் இறுதியில் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இன்று வெளியான ப்ரோமோவில் விஜய் சேதுபதி, சாதிகாவின் டபுள் கேம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளார். இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது 10வது வாரத்தின் இறுதியில் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தற்போது மொத்தமாக 12 போட்டியாளர்கள் மட்டுமே மீதம் உள்ளார்கள். இந்நிகழ்ச்சியானது தொடங்கி இன்றுடன் (13/11/2026) 69வது நாட்களாகியுள்ளது. வார இறுதியான இன்று போட்டியாளர்களை விஜய் சேதுபதி (Vijay Sethupathi) சந்திப்பது உண்டு. அந்த விதத்தில் இவர் இந்த வாரத்தில் பிக் பாஸ் சீசன் 10 வீட்டில் நடந்த அதிரடி, டபுள் கேம் மற்றும் ஃபேவரடிசம் குறித்த கேள்விகளை எழுப்புவதாக முதல் ப்ரோமோவில் பேசியிருந்தார். அதன் பிறகு வந்த ப்ரோமோவில், அவர் ஜேசனிடம் பல கேள்விகளை எழுப்பியிருந்தார்.
அந்த கேள்விகளுக்கு எல்லாம் சரியான பதிலை கொடுக்காத ஜேசன், விஜய் சேதுபதியிடம் அநாகரிகமாக நடந்துகொண்டிருந்தார். இந்த விதத்தில் தற்போது வெளியாகியுள்ள 3வது ப்ரோமோவில், விஜய் சேதுபதி சாதிகாவிடம் கேள்விகளால் தாக்குவதுபோல காட்டப்பட்டுள்ளது.




இதையும் படிங்க: 9 நாட்கள் முடிவில்… சூர்யாவின் சீன் படம் தமிழகத்தில் மொத்தம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?
சாதிகாவிடம் கேள்வியால் தாக்கி பேசிய விஜய் சேதுபதி:
இந்த ப்ரோமோவில், விஜய் சேதுபதி சாதிகாவை எழுப்பி அவரிடம் கேள்விகளை கேட்க தொடங்கியிருந்தார். விஜய் சேதுபதி, “நீங்கதான் சொல்லணும் சாதிகா, எல்லாருக்கும் வாய்ப்பு போகவேண்டும் என கூறியவர் நீங்கதான். வாய்ப்பு என்றால் என்ன என பாடம் எடுத்து, அதற்கு ஒருவர் ஆதரவாகி, அப்போது அதை பார்க்கும் நாங்கள் யாரு? கூட உடன் இருப்பவர்கள் எல்லாம் யாரு? கை தூக்கினீங்க.
இதையும் படிங்க: இதெல்லாம் ஏன்ட வெச்சிக்காதிங்க.. விஜய் சேதுபதியிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட ஜேசன் – தீயாய் பரவும் ப்ரோமோ!
ஆட்டத்தை திருப்பிவிட்டீங்க.. ஆனால் காரணம் யார் என்றால் ஜேசனை காய் காட்டினீர்கள். வினோத் பாபுவை பார்க்கும்போது உங்களுக்கு பாவம் வரல.. ஆனால அடாவடி அன்சரை பார்க்கும்போது மட்டும் உங்களுக்கு எப்படி வந்தால்.. அதை ஃபேவரிடிசமாக பார்க்காமல் வேறு எதுவாக பார்க்கவேண்டும்” என கேள்விகளால் விஜய் சேதுபதி சாதிகாவை நிலைகுலைய வைத்திருந்தார்.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 69வது நாளின் 3வது ப்ரோமோ குறித்த பதிவு:
#Day69 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/zL500Zk5wP
— Vijay Television (@vijaytelevision) November 14, 2026
இந்த வாரத்தில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் ஜூனியர் பிக் பாஸ் என்ற டாஸ்க் நடந்தது. அதில் முதல் ஜூனியர் பிக் பாஸாக வினோத் பாபு இருந்தார். அவர் பதவி விலகவேண்டும், அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கனும் என சாதிகா கூறியிருந்தார்.
ஆனால் அன்சர் அந்த பதவியில் இருக்கையில், அவர்தான் அந்த பதவிக்கு சரியான நபர் என மாற்றி பேசியிருந்தார். இது வீட்டில் போட்டியாளர்கள் மத்தியிலே கேள்விகளை எழுப்பிய நிலையில், அதை விஜய் சேதுபதி வெளிப்படையாக கேட்டுள்ளார். அது குறித்த ப்ரோமோதான் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது.