சுயநலம்… ஸ்டேர்டஜி… குரூப்பிசம்… பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து பேசிய விஜய் சேதுபதி – வைரலாகும் வீடியோ!
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் பிக்பாஸின் குரல் ஒலிக்காமல் ஜூனியர் பிக்பாஸ் தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சி எப்படி இருந்தது என்பது குறித்து விஜய் சேதுபதி இன்று வெளிப்படையாக பேச உள்ளது புரோமோ வீடியோவில் தெரிகிறது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi). இவர் சின்னத்திரையில் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் தமிழ். இந்த நிகழ்ச்சியில் 8-வது சீசனில் இருந்து விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். முன்னதாக முதலாவது சீசனில் இருந்து 7-வது சீசன் வரை நடிகர் கமல் ஹாசன் இந்த பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வருடமும் ஒளிபரப்பாகும் போது மற்ற நிகழ்ச்சிகளைவிட அதிக அளவில் டிஆர்பியைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அதன்படி இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தற்போது 10-வது வாரம் முடிவுக்கு வந்துள்ளது.
இன்னும் 40 நாட்களே உள்ள நிலையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கின்றது. இந்த 10-வது வாரம் பிக்பாஸின் குரல் இல்லாமல் ஜூனியர் பிக்பாஸை வைத்து நிகழ்ச்சி ஒளிபரப்பான நிலையில் பல சண்டைகளும் சலசலப்புகளும் நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.




பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து பேசிய விஜய் சேதுபதி:
இந்த நிலையில் இன்று பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் 10வது வாரம் இறுதியில் உள்ளது. இன்று விஜய் சேதுபதி போட்டியாளர்களிடையே பேச உள்ள நிலையில் முதல் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அந்த புரோமோ வீடியோவில் இந்த வாரம் ஜூனியர் பிக்பாஸ் டாஸ்கில் போட்டியாளர்கள் இடையே சுயநலம்… ஸ்டேர்டஜி… குரூப்பிசம் தான் அதிக அளவில் தெரிந்தது என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் சிலர் அழுது ட்ராமா செய்தது குறித்தும் பேச உள்ளார். இந்த நிலையில் இந்த புரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read… Hello Kadhal: நிறைவே… ஆர்யா – வைஷ்ணவியின் ஹலோ காதல் படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியீடு!
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day69 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/V3qQLqQZLE
— Vijay Television (@vijaytelevision) November 14, 2026
Also Read… என்ன நடக்குது?? மாற்றி மாற்றி பேசும் LP – சாதிகா… தன்யாவிடம் புலம்பிய முத்தழகி!