AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

டோரதி படத்திலிருந்து வெளியானது முத்துமணி வீடியோ பாடல்!

Muthumani Video Song Out Now | தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் இளையராஜா இசையில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் டோரதி. இந்தப் படத்தில் இருந்து தற்போது முத்துமணி என்ற பாடலின் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

டோரதி படத்திலிருந்து வெளியானது முத்துமணி வீடியோ பாடல்!
டோரதிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Nov 2026 11:02 AM IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் (Karthik Subbaraj). இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கி வந்த இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் சமீபத்தில் நடிகர்கள் சனந்த் மற்றும் ரிஷிகாந்த் என இரண்டாம் கட்ட நடிகர்களை கதையின் நாயகன்களாக வைத்து இயக்கிய படம் டோரதி. இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்த நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

மேலும் இந்த டோரதி படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தொடர்ந்து திரையரங்குகளில் மட்டும் இன்றி தற்போது ஓடிடியில் வெளியான டோரதி படம் உலக அளவில் மற்ற மொழி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

டோரதி படத்திலிருந்து வெளியானது முத்துமணி வீடியோ பாடல்:

இந்த நிலையில் இந்த டோரதி படத்தில் இருந்து முன்னதாக படம் வெளியாவதற்கு முன்பு லிரிகள் வீடியோவாக பாடல்கள் வெளியாகி வந்தது. படம் திரையரங்குகளில் வெளியானதற்கு பிறகு தொடர்ந்து பாடல்களின் வீடியோ வெளியாகி வருகின்றது. அந்த வகையில் தற்போது இந்த டோரதி படத்தில் இருந்து முத்துமணி என்ற பாடலின் வீடியோவை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… ஓம் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது இருக்கும்? வைரலாகும் தகவல்

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… பிக்பாஸில் டிடிஎஃப் வாசன் மற்றும் ஜேசன் இடையே தள்ளுமுள்ளு – வெளியானது கலேபர வீடியோ

Follow Us