AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஓம் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது இருக்கும்? வைரலாகும் தகவல்

OM Movie Trailer Release Update | தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஓம். இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது என்பது குறித்த தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

ஓம் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது இருக்கும்? வைரலாகும் தகவல்
ஓம் படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 12 Nov 2026 12:07 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் (Actor Dhanush). சினிமாவில் நாயகனாக இருப்பவர்கள் நாயகனாக மட்டுமே நடிப்பார்கள். ஒரு சிலர் மட்டுமே சினிமாவில் அனைத்து துறைகளிலும் தங்களது காலடி தடத்தைப் பதிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வரிசையில் தற்போதைய தலைமுறை நடிகர்கள் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர். அவர்களை நாம் விரல்விட்டு எண்ணிவிடலாம். அதில் ஒருவர் தான் நடிகர் தனுஷ். இவர் சினிமாவில் நாயகனாக நடிப்பது மட்டும் சினிமாவில் இயக்குநராகவும், பாடலாசியராகவும், தயாரிப்பாளராகவும், பாடகராகவும் வலம் வருகிறார். தொடர்ந்து சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக கர படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் ஓம். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் தனுஷ் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் படம் வருகின்ற 20-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஓம் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது இருக்கும்? வைரலாகும் தகவல்:

இந்த நிலையில் படம் வெளியாக இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது இருக்கும் என்பது குறித்த தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி இந்த ஓம் சாப்டர் ஒன் படத்தின் ட்ரெய்லர் வருகின்ற 15-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு வெளியாகும் என்று தெரிவிக்கின்றது.

மேலும் ஓம் திரைப்படத்தின் கால அளவு 2 மணி நேரம் 59 நிமிடங்கள் (179 நிமிடங்கள்) என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தின் ஒன் லைன் என்பது சட்டத்தை மீறுபவர்களும் சட்ட அமலாக்க அதிகாரிகளும் அருகருகே வாழும் ஒரு கடுமையான சூழலில் நடக்கும் உணர்ச்சிகரமான நாடகம் இது. பேராசை, அதிகாரம் மற்றும் வறுமை ஆகியவை இங்கே கொடூரமான செயல்கள், குற்றங்கள், வன்முறை மற்றும் இரத்தக் களரிக்கு வழிவகுக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… சீன் பட கதையை சூர்யா சாரிடம் சொன்னபோது… டேய் அடபாவி… இதெல்லாம் நான் செய்யனுமா என்று கேட்டார் – இயக்குநர் ஓபன் டாக்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ஜூனியர் பிக்பாஸ் பதவியிலிருந்து வெளியேற நினைக்கும் முனியம்மாள் – என்ன நடந்தது?

Follow Us