சீன் பட கதையை சூர்யா சாரிடம் சொன்னபோது… டேய் அடபாவி… இதெல்லாம் நான் செய்யனுமா என்று கேட்டார் – இயக்குநர் ஓபன் டாக்
Director Jithu Madhavan talks about Suriya | தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கும் சீன் படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்தப் பேட்டி தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் கடந்த நவம்பர் மாதம் 06-ம் தேதி 2026-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான படம் சீன் (Scene Movie). நடிகர் சூர்யாவின் நடிப்பில் ஆக்ஷன் காமெடி பாணியில் உருவாகி உள்ள இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானதில் இருந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடிகர்கள் நாஸ்லென், நஸ்ரியா நசிம், ஆனந்தராஜ், லால், ராஜ்பிரியன், சுரேஷ் மதியழகன், கஜராஜ் மற்றும் அனுராதா ஸ்ரீதர் உட்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் நடிகர்கள் டொவினோ தாமஸ் மற்றும் ஜோதிகா இருவரும் இந்த சீன் படத்தில் கேமியோ வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
படம் திரையரங்குகளில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வரும் நிலையில் படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் சூர்யாவிடம் சீன் படத்தின் கதையை எப்படி கூறினார் என்பதையும் அதற்கு சூர்யா எப்படி ரியாக்ட் செய்தார் என்பது குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார்.




சீன் படத்தின் கதையை கேட்டு சூர்யா கொடுத்த ரியாக்ஷன்:
சூர்யா சார் அவர்களிடம், நகைச்சுவைக்கென்று தனியாக ஒரு கதாபாத்திரம் இல்லை என்றும், படம் முழுவதும் நீங்களே நகைச்சுவையைக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் கூறினேன். கதாநாயகனாகிய நீங்களே அந்த நகைச்சுவையைச் செய்ய வேண்டும் என்று அவரிடம் விளக்கினேன். காட்சிகளை விவரித்தபோது, அவர், டேய் அடப்பாவி! இதையெல்லாம் செய்யணுமா? இதையெல்லாம் நான் இதுவரை செய்ததே இல்லையே! என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.
அதன்பிறகு, ஏழாம் அறிவு படத்தைக் குறிப்பிடும் யோசனையை அவரே முன்வைத்தார். முதலில் நான் சிங்கம் பட வசனத்தைப் பயன்படுத்தலாம் என்று நினைத்திருந்தேன், வேறொரு காட்சியையும் திட்டமிட்டிருந்தேன். ஆனால், நான் திட்டமிட்டிருந்ததிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு காணொளியைக் காட்டி, அதைச் செய்ய விரும்பினார். அப்போதுதான் அது ஏழாம் அறிவு படத்தைக் குறிக்கும் விஷயம் என்று எனக்குப் புரிந்தது. ஆரம்பத்தில் நான் ஒரு குச்சியைக் கொண்டு அந்தச் காட்சியைச் செய்யலாம் என்று நினைத்திருந்தேன், ஆனால் அந்த குறிப்பிட்ட யோசனை சூர்யா சார் தரப்பிலிருந்தே வந்தது என்று ஜித்து மாதவன் தெரிவித்துள்ளார்.
Also Read… முடிஞ்சா கைய வை.. தன்யாவிடம் கைகலப்பில் ஈடுபட்ட முகேஷ் – பரபரப்பில் பிக் பாஸ் வீடு!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Scene – I told #Suriya sir that there’s no separate character for humour. You have to carry the humour throughout the film. You’re the hero, and you have to do the humour. When I narrated the scenes, he said, “Dai Adapaavi, Idhellam Pannanum, Idhellam Naan Pannathae Illa!”
He then came up with the #7AMArivu reference idea. Initially, I had a #Singam dialogue reference in mind, and I had planned another episode as well. But he showed me a video that was different from what I had initially planned and wanted to do that. Only then did I understand that it was the 7 AM Arivu reference. I initially had an idea of doing it with a stick, but that particular idea came from Suriya sir.
– #JithuMadhavan https://t.co/Btm4VGmMxl— Movies Singapore (@MoviesSingapore) November 11, 2026
Also Read… Kamal Haasan: சண்டியர் திரைப்படத்தின் ஷூட்டிங்கில் இணைந்த கமல்ஹாசன் – வைரலாகும் போட்டோ!