தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு – பெயர் சேர்க்க, திருத்தங்கள் செய்ய கடைசி நாள் இதுதான்
Draft Electoral Rolls : ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை நவம்பர் 12, 2026 இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார். சென்னையில் மாநகராட்சி கமிஷனரும் மற்ற இடங்களில் மாவட்ட கலெக்டர்களும் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர்.
சென்னை, நவம்பர் 12 : தமிழ்நாட்டில் மாவட்டம்தோறும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் மாநகராட்சி ஆணையரும், மற்ற மாவட்டங்களில் கலெக்டர்களும் வெளியிட்டனர். தமிழகத்தில் மேற்கொள்ளப்பட உள்ள வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளைத் (SIR) தொடர்ந்து சட்டமன்ற தேர்தலுக்கு முன் கடந்த பிப்ரவரி 23, 2026 அன்று வெளியிடப்பட்டது.
தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப்பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) முடிந்து, அதன் அடிப்படையில் கடந்த சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அடுத்ததாக, ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் (எஸ்.எஸ்.ஆர்.) தொடங்கப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் ஏற்கனவே வெளியிட்டு உள்ளது.க்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதையும் படிக்க : பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி விவகாரம்.. கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபியிடம் அதிமுக புகார்!




இந்தநிலையில், ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை நவம்பர் 12, 2026 இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார். சென்னையில் மாநகராட்சி கமிஷனரும் மற்ற இடங்களில் மாவட்ட கலெக்டர்களும் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர்.
பெயர் சேர்க்க, நீக்க, திருத்தங்கள் செய்ய டிசம்பர் 11, 2026 வரை விண்ணப்பிக்கலாம். இதற்காக சிறப்பு முகாம்கள் விடுமுறை நாட்களில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீக்கப்பட்ட, சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளியிட வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானதும், பொதுமக்கள் தங்களது பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா, பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளனவா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளலாம். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, இன்று (நவம்பர் 12) முதல் டிசம்பர் 11ஆம் தேதி வரை பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களை அளிக்கலாம்.
பெறப்படும் விண்ணப்பங்கள் மீது டிசம்பர் 28ஆம் தேதிக்குள் முடிவுகள் எடுக்கப்படும். இதையடுத்து, 2027 ஜனவரி 4ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், பெயர் நீக்கவும், விவரங்களைத் திருத்தவும், முகவரியை மாற்றவும் முறையே படிவம் 6, படிவம் 7 மற்றும் படிவம் 8 ஆகியவற்றைப் பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
இதையும் படிக்க : பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறையா?.. ஆலோசனையில் தமிழக அரசு.. பின்னணி என்ன?
ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பங்களை அலுவலக வேலை நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் ஆகியோரிடம் அளிக்கலாம். சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்களில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களிலும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
மேலும், https://voterportal.eci.gov.in என்ற இணையதளம் மற்றும் ECINET கைப்பேசி செயலி மூலமாகவும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கும் போது, இருப்பிட முகவரி மற்றும் வயதுக்கான சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.