இந்தியாவின் தூய்மையான நகரம் – தமிழகத்தில் அல்லிநகரத்துக்கு விருது
Tamil Nadu Cleanest City Award : இந்தியாவில் தூய்மையை மேம்படுத்தும் நோக்கில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தூய்மை நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் மிகத் தூய்மையான நகரமாக தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சி முதலிடம் பிடித்துள்ளது.
மத்திய அரசின் 2025-26 ஆம் ஆண்டுக்கான தூய்மை நகரங்கள் (Cleanest City ) விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் பிரிவில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் ‘அல்லி நகரம் சிறந்த தூய்மையான நகரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அல்லிநகரம் நகராட்சி ஆணையர் பார்கவிக்கு குடியரசுத் தலைவர் விருதை வழங்கி கௌரவித்தார்.
இந்தியாவில் தூய்மையை மேம்படுத்தும் நோக்கில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தூய்மை நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2025 – 26 ஆம் ஆண்டுக்கான நகரங்கள் அறிவிக்கப்பட்டன. இதற்கான விருது வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு, விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
இதையும் படிக்க : முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது ரூ.3.35 கோடி மோசடி புகார்.. சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு!




தமிழ்நாட்டின் துாய்மையான நகரமாக அல்லிநகரம் தேர்வு
இதில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்கள் பிரிவில் ஆந்திராவின் விசாகப்பட்டினம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் 2வது இடத்தையும், உத்தரபிரதேச மாநிலத்தின் லக்னோ 3வது இடத்தையும் பெற்றுள்ளன.
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், தமிழ்நாட்டின் மிகத் தூய்மையான நகரமாக தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சி முதலிடம் பிடித்துள்ளது. இதையொட்டி, விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அல்லிநகரம் நகராட்சிக்கான விருதை வழங்கினார். நகராட்சித் தலைவர் பார்கவி நேரில் சென்று விருதைப் பெற்றுக்கொண்டார்.
தூய்மை குறித்து குடியரசுத் தலைவர் வலியுறுத்தல்
விருது வழங்கும் விழாவில் பேசிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நாட்டை தூய்மையாக வைத்திருப்பது அரசின் பொறுப்பு மட்டுமல்ல என்றும், பொதுமக்கள் உள்ளிட்ட ஒவ்வொருவரின் பொறுப்பும் இதில் மிகவும் முக்கியம். குறிப்பாக குழந்தைகளிடம் தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் குழந்தைகளிடம் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை உள்ளிட்டவற்றை பள்ளி பாடத்திட்டங்களில் சேர்ப்பது மிகவும் அவசியம் என்றார்.
இதையும் படிக்க : தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்.. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு கூடுதலாக ரூ.25 லட்சம் வழங்கி தமிழக அரசு உத்தரவு!!
மேலும் 50 ஆயிரம் முதல் 3 லட்சம் வரையிலான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் பிரிவினர் மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் முதலிடத்தையும் புதுடெல்லி நகராட்சி கவுன்சில் இரண்டாவது இடத்தையும் பிடித்தன. இதுமட்டுமல்லாமல் ஏற்கெனவே தூய்மை நகரங்கள் பட்டியலில் சிறப்பான இடங்களைப் பெற்ற நகரங்களுக்காக இந்த ஆண்டு சூப்பர் ஸ்வச் லீக் என்ற புதுபிரிவு உருவாக்கப்பட்ட நிலையில் மகாராஷ்டிராவின் நவி மும்பை முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த இடத்தில் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் 2வது இடமும், ஆந்திராவின் விஜயவாடா 3வது இடத்தையும் பிடித்தன.