AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

புயல் எச்சரிக்கை – இன்று இரவுக்குள் கரைக்கு திரும்ப மீனவர்களுக்கு உத்தரவு – எங்கெல்லாம் மழை

Tamil Nadu Fishermen Cyclone Alert : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் நவம்பர் 13, 2026 புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அது அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறும் என்றும் இதனால் கடலுக்கு சென்ற மீனவர்கள் நவம்பர் 12, 2026 இன்று இரவுக்குள் கரைக்கு திரும்ப வேண்டும் என மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.

புயல் எச்சரிக்கை – இன்று இரவுக்குள் கரைக்கு திரும்ப மீனவர்களுக்கு உத்தரவு – எங்கெல்லாம் மழை
மாதிரி புகைப்படம்Image Source: Twitter
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 12 Nov 2026 06:45 AM IST

சென்னை, நவம்பர் 12 : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இது 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக வருகிற நவம்பர் 17, 2026 வரை பல்வேறு பகுதிகளில் மழைக்கு (Rain Alert) வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

உருவாகும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், தெற்கு அந்தமான் மற்றும் மன்னார் வளைகுடா அதனை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் வருகிற நவம்பர் 13, 2026 நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் அது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி பெண் கொலை.. கணவர் கைது.. நிர்கதியான 3 குழந்தைகள்!

எங்கெல்லாம் இன்று மழைக்கு வாய்ப்பு?

இதனையடுத்து நவம்பர் 12, 2026 இன்று தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் ஏனைய வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து நவம்பர் 13, 2026 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை நிலவரம்

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நவம்பர் 12, 2026 இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிக லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்ப நிலையை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 31 முதல் 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

இதற்கிடையே தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் நவம்பர் 13, 2026 புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில் புதிய புயல் சின்னம் வட தமிழகக் கடற்கரையை நோக்கி நகரவே அதிக வாய்ப்புள்ளதாக வானிலை கணிப்புகள் தெரிவிக்கின்றன. எதிர்பார்க்கப்படும் மோசமான வானிலை மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, வரும் நவம்பர் 13, 2026 முதல் மறு உத்தரவு வரும் வரை எந்தவொரு மீன்பிடிப் படகுகளுக்கும் அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட மாட்டாது என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.

கடலில் உள்ள விசைப்படகுகள் அனைத்தும் உடனடியாக மீன்பிடித் துறைமுகங்களுக்குத் திரும்பி, பாதுகாப்பான இடங்களில் நங்கூரமிட்டு நிறுத்தப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். தினசரி கடலுக்குச் செல்லும் சிறிய நாட்டுப்படகுகள், ஃபைபர் படகுகள் உள்ளிட்ட அனைத்து படகுகளும் நவம்பர் 12, 2026 கரைக்குத் திரும்பி மீன் இறங்குதளங்களில் பாதுகாப்பாக நிறுத்தப்பட வேண்டும் என எச்சரிகைக விடுக்கப்பட்டுள்ளது.

Follow Us