AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நடுரோட்டில் முதியவர் வெட்டி படுகொலை.. அரக்கோணத்தில் பெரும் பரபரப்பு.. 7 பேர் கும்பல் அதிரடி கைது!

Arakkonam Murder 7 Arrested : ராணிப்பேட்டையில் நடு ரோட்டில் முதியவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய கும்பலை சேர்ந்த 7 பேரை நெமிலி போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடுரோட்டில் முதியவர் வெட்டி படுகொலை.. அரக்கோணத்தில் பெரும் பரபரப்பு.. 7 பேர் கும்பல் அதிரடி கைது!
மாதிரி புகைப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 11 Nov 2026 17:35 PM IST

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முன்விரோதம் காரணமாக முதியவர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 7 பேரை நெமிலி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே உள்ள கீழ் வீதி கிராமத்தில் வசித்து வந்தவர் சுகுமார் ( 70 வயது). இவருக்கும், இதே பகுதியில் வசித்து வரும் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு நீண்ட நாட்களாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை ( நவம்பர் 10- ஆம் தேதி) முதியவர் சுகுமார் அந்த பகுதி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம கும்பல் அவரை வழி மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டது.

நடுரோட்டில் முதியவரை வெட்டி கொன்ற கும்பல்

அத்துடன், அவரை சரமாரியாக தாக்கிய நிலையில், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அவரை கொடூரமாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது. இந்த கொடூர சம்பவத்தில் முதியவர் சுகுமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிர் இழந்தார். இது தொடர்பாக அந்த வழியாக சென்ற பொதுமக்கள் நெமிலி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில், போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று சுகுமாரின் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வு மேற்கொள்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க: சென்னையில் 2- ஆவது நாளாக ரவுடிகள் வேட்டை.. 147 பேர் அதிரடி கைது.. காவல் ஆணையர் கடும் எச்சரிக்கை!

சந்தேக நபர்களிடம் நெமிலி போலீசார் விசாரணை

தொடர்ந்து, அந்தப் பகுதியில் தீவிர மேற்கொண்டனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அத்துடன், முதியவர் சுகுமாருடன் ஏற்கெனவே முன்விரோதம் காரணமாக தகாறில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த நபர்கள் முதியவர் சுகுமாரை கொலை செய்தது உறுதிசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர்களை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

முதியவர் கொலையில் 7 பேர் கைது- சிறையில் அடைப்பு

பின்னர், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் 7 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வருவதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் முதியவர் என்றும் பாராமல் 7 பேர் கொண்ட கும்பல் பயங்கரமான ஆயுதங்களால் கொடூரமான முறையில் அவரை கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி பெண் கொலை.. கணவர் கைது.. நிர்கதியான 3 குழந்தைகள்!

Follow Us