AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தவெக ஆட்சியில் மீண்டும் சிறுமி கடத்தல் முயற்சி.. காவல்துறைக்கு விடப்பட்ட சவால்.. நயினார் நாகேந்திரன்!

Nainar Nagendran Latest Pressmeet : தூங்கும் தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் ஏற்கெனவே செஞ்சியில் சிறுமி மாயமான விவகாரத்தில் துப்பு துலங்காத நிலையில் மேலும் ஒரு சிறுமி கடத்தல் முயற்சி சம்பவம் காவல்துறைக்கு விடப்பட்ட சவால் என்றார் நயினார் நாகேந்திரன்.

தவெக ஆட்சியில் மீண்டும் சிறுமி கடத்தல் முயற்சி.. காவல்துறைக்கு விடப்பட்ட சவால்.. நயினார் நாகேந்திரன்!
முதல்வர் விஜய்- நயினார் நாகேந்திரன்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 11 Nov 2026 16:33 PM IST

செஞ்சியில் சிறுமி மாயமான சம்பவம் நடந்து  ஒரு மாதம் ஆகும் நிலையில், மீண்டும் அதே பகுதியில் சிறுமி கடத்தல் முயற்சி நடந்திருப்பது தமிழக காவல்துறைக்கு விடப்பட்டுள்ள சவால் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:  விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தை சேர்ந்த 7 வயதான ஹேமலதா என்ற சிறுமி காணாமல் போய் இன்றுடன் ஒரு மாதம் ஆகிறது. இந்த விவகாரத்தில் காவல்துறை முதல் சிபிசிஐடி போலீசார் வரை விசாரணை மேற்கொண்டும் எந்தவிதமான துப்பும் துலக்க முடியாமல் திணறி வருகின்றனர். அந்த சிறுமியின் பெற்றோர் வடிவேலு, பவானி ஆகியோர் கண்ணீரில் கதறி வரும் நிலையில், ஒரு பச்சிளம் குழந்தையை கூட பாதுகாக்க தெரியாத திறனற்ற அரசாக ஜோசப் விஜய்  தலைமையிலான அரசின் நிர்வாகம் தூங்கிக் கொண்டிருக்கிறது.

தூங்கும் தவெக ஆட்சியில் மீண்டும் சிறுமி கடத்தல் முயற்சி

இந்த அதிர்ச்சி சம்பவம் அடங்குவதற்குள், அதை செஞ்சி அருகே உள்ள ஜெயங்கொண்டானில் கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய மற்றொரு 7 வயது சிறுமியை மர்ம நபர்கள் ஆட்டோவில் வந்து கடத்தி செல்ல முயன்ற சம்பவம் மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது. அந்த சிறுமி சாதுரியமாக செயல்பட்டு சத்தம் போட்டதன் காரணமாக பொதுமக்க விரைந்து வந்து அந்த மர்ம நபர்களிடம் இருந்து சிறுமியை காப்பாற்றினர். இந்த சம்பவம் நடைபெற்ற பகுதியில்  போலீசார் ரோந்து பணியோ, பாதுகாப்போ மேற்கொள்ளவில்லை.

மேலும் படிக்க: ரூ.400 கோடி லஞ்ச புகார்.. ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் சரணடைந்த முக்கிய நபர்.. வழக்கில் அடுத்த பரபரப்பு!

காவல்துறைக்கு விடப்பட்ட சவாலாகும்

ஏற்கெனவே, இத்தகைய கொடூர சம்பவம் நிகழ்ந்திருக்கும் நிலையில், அதையே பகுதியில் மீண்டும் ஒரு  சிறுமி கடத்த முயன்ற சம்பவம் தமிழக காவல்துறைக்கு விடப்பட்ட சவாலாகும். ஒரு குழந்தையை காணாமல் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்தப் பகுதியில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தாமல் அலட்சியமாக இருந்தது தமிழக வெற்றி கழக அரசின் மன்னிக்க முடியாத பெரிய தவறாகும். எனவே, சிறுமி ஹேமலதாவை உடனடியாக கண்டுபிடிக்க சிபிசிஐடி கண்காணிப்பில் அனுபவம் பெற்ற அதிகாரிகளை நியமிக்க வேண்டும். அவர்கள் மூலம் கூடுதல் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட வேண்டும்.

24 மணி நேரமும் போலீஸ் ரோந்து பணியை உறுதி செய்ய வேண்டும்

மேலும், செஞ்சி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்கள் மற்றும்  குடியிருப்பு பகுதிகளில் 24 மணி நேரமும் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும். அத்துடன், முக்கிய சந்திப்பு பகுதிகளில் உடனடியாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்  என தவெக அரசை  வலியுறுத்துவதாக அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் தமிழக அரசு கைகள் கட்டப்பட்டுள்ளது.. உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பு விளக்கம்!

Follow Us