AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தேனி சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகளும் கைது! மதுரையைச் சேர்ந்த சகோதரர்கள் காவல் நிலையத்தில் சரண்

Theni Prison Breakout: அக்டோபர் 27ஆம் தேதி நிலவரப்படி, தப்பியோடிய 17 கைதிகளில் 13 பேரைக் காவல்துறையினர் கைது செய்திருந்தனர். இதையடுத்து, அக்டோபர் 28ஆம் தேதி காலையில் மேலும் இரண்டு கைதிகள் கைது செய்யப்பட்டனர். இதனால், கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது.

தேனி சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகளும் கைது! மதுரையைச் சேர்ந்த சகோதரர்கள் காவல் நிலையத்தில் சரண்
பிடிபட்ட கைதிகள்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 28 Oct 2026 19:05 PM IST

அக்டோபர் 28, 2026: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி மாவட்டச் சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகளையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தப்பியோடிய கைதிகளைப் பிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த சகோதரர்களான திருப்பதி மற்றும் மீனாட்சிசுந்தரம் ஆகிய இருவரும் வழக்கறிஞர்களுடன் கூடலூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இதையடுத்து, அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

சிறைக் காவலரைத் தாக்கிவிட்டு தப்பிய கைதிகள்!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டியில் மாவட்டச் சிறை அமைந்துள்ளது. இங்கு விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சிறையில் இருந்த விசாரணைக் கைதி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டதாகக் கூறி, சக கைதிகள் கூச்சலிட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த சிறைக் காவலரைத் தாக்கிய 17 கைதிகளும் சிறையிலிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து உடனடியாகத் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இரவு முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை!

இதையடுத்து, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.எஸ். பிரவீன் கௌதமன் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டனர். வாகனத் தணிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதுடன், மாவட்டச் சிறையைச் சுற்றியுள்ள சுமார் 10 கிலோமீட்டர் சுற்றளவிலும் காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இரவு முழுவதும் நடைபெற்ற தேடுதல் வேட்டையில், சிறையின் பின்பகுதியில் ராஜா சிக்கந்தர் (24), ராஜ்குமார் (20) ஆகியோர் பிடிபட்டனர். சிறைக்கு அருகே இருள் சூழ்ந்த பகுதியில் பதுங்கியிருந்த பிரவீன்குமார் (25) என்பவரும் காவல்துறையினரிடம் சிக்கினார்.

மேலும் படிக்க: தீபாவளிக்கு மறுநாள் விடுமுறையா.. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு.. ஆனால் ஒரு ட்விஸ்ட்!

மேலும், சிலம்பரசன் (24) என்பவர் திருமலாபுரம் பகுதியில் கைது செய்யப்பட்டார். மாற்றுத்திறனாளியான பிரசாந்த் என்ற லிங்கபிரசாந்த் (25), தேக்கம்பட்டியில் ஆட்டோவில் பயணம் செய்தபோது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து நடைபெற்ற தேடுதல் வேட்டையில், ட்ரோன் கேமராக்களின் உதவியுடனும் தப்பியோடிய கைதிகளைக் கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் மேலும் சில கைதிகள் பிடிபட்டனர்.

அடுத்தடுத்து சிக்கிய கைதிகள்!

அக்டோபர் 27ஆம் தேதி நிலவரப்படி, தப்பியோடிய 17 கைதிகளில் 13 பேரைக் காவல்துறையினர் கைது செய்திருந்தனர். இதையடுத்து, அக்டோபர் 28ஆம் தேதி காலையில் மேலும் இரண்டு கைதிகள் கைது செய்யப்பட்டனர். இதனால், கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது.

மீதமிருந்த இரண்டு கைதிகளான மதுரையைச் சேர்ந்த சகோதரர்கள் திருப்பதி மற்றும் மீனாட்சிசுந்தரம் ஆகியோரைப் பிடிக்கத் தனிப்படையினர் தீவிரமாகத் தேடி வந்தனர். அவர்கள் இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிவதாகவும் தகவல்கள் வெளியாகின.

மேலும் படிக்க: சோப்பு- ஷாம்புவால் ஆற்றில் நுரையா? அமைச்சர் பொறுப்பற்று பேசலாமா? நறுக் குட்டு வைத்த தவாக வேல்முருகன்!

வழக்கறிஞர்களுடன் காவல் நிலையத்தில் சரண்!

இந்நிலையில், தேடப்பட்டு வந்த திருப்பதி மற்றும் மீனாட்சிசுந்தரம் ஆகிய இருவரும் வழக்கறிஞர்களுடன் கூடலூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இதையடுத்து, காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர். இதன் மூலம் தேனி மாவட்டச் சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறைக் காவலரைத் தாக்கிவிட்டு கைதிகள் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அனைவரும் மீண்டும் காவல்துறையினரின் பிடியில் சிக்கியுள்ளனர்.

 

Follow Us