AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

செங்கல்பட்டில் அதிர்ச்சி.. மின் கட்டணத்தை அபேஸ் செய்த கணக்கீட்டாளர் பணியிடை நீக்கம்.. அதிரடி நடவடிக்கை!

Chengalpattu EB Assessor Suspend : செங்கல்பட்டு மாவட்டத்தில் வீடுகளுக்கான மின் கட்டணத்தை கையாடல் செய்ததாக மின்வாரிய கணக்கீட்டாளர் ஒருவரை துறையின் உயர் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளனர். இது துறை ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

செங்கல்பட்டில் அதிர்ச்சி.. மின் கட்டணத்தை அபேஸ் செய்த கணக்கீட்டாளர் பணியிடை நீக்கம்.. அதிரடி நடவடிக்கை!
மாதிரி புகைப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 28 Oct 2026 20:49 PM IST

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் கடந்த சில மாதங்களாக மின் கட்டணம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில், 8- க்கும் மேற்பட்ட வீடுகளில் முன்னறிவிப்பு இன்றி திடீரென மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட வீட்டினர் மின் கட்டணம் செலுத்தியதற்கான ரசீதுடன் செம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் மின்வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்று முறையிட்டனர். அப்போது, மின் கட்டணம் செலுத்தாத காரணத்தினாலேயே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக மின்வாரிய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

மின்துறை அதிகாரிகளுடன் நுகர்வோர்கள் கடும் வாக்குவாதம்

இதை ஏற்க மறுத்த மின் நுகர்வோர்கள் தாங்கள் ஏற்கனவே மின் கட்டணம் செலுத்தியதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக மின்வாரிய அலுவலர்கள் தங்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் அடிப்படையில், உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின் நுகர்வோர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த மின் நுகர்வோர்கள் தங்கள் வீடுகளுக்கான மின் கட்டணத்தை செலுத்தியதும், அதற்கான ரசீது சீட்டுகளை வைத்திருந்ததும் உறுதி செய்யப்பட்டது.

மேலும் படிக்க: தேனியில் பகீர் வேட்டை.. யானை தந்தம் கடத்திய 4 பேர் அதிரடி கைது.. வனத்துறை அதிரடி நடவடிக்கை!

மின் கட்டணத்தை கையாடல் செய்த கணக்கீட்டாளர்

தொடர்ந்து, செம்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் அலுவலர்களிடம் உயர் அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த அலுவலகத்தில் மின் கணக்கீட்டாளராக பணிபுரிந்து வரும் அருண்குமார் என்பவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால், சந்தேகம் அடைந்த மின்வாரிய உயர் அதிகாரிகள் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் வீடுகள் தோறும் மின் கணக்கீடு செய்ய சென்றபோது, வயது முதிர்வு காரணமாக மின்வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்று மின் கட்டணம் செலுத்த முடியாத பொதுமக்கள் தங்கள் மின் கட்டணத்தை கணக்கீட்டாளர் அருண்குமாரிடம் கொடுத்து செலுத்துமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

மின்வாரிய கணக்கீட்டாளர் அதிரடி சஸ்பெண்ட்

அதன்படி, அந்த மின் கட்டணத்தை கணக்கீட்டாளர் அருண்குமார் அலுவலகத்தில் செலுத்தாமல் கையாள செய்து வந்துள்ளது தெரிய வந்தது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மின்வாரிய உயர் அதிகாரிகள் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். அதன்படி, செம்பாக்கம் மின்வாரிய கணக்கீட்டாளர் அருண்குமாரை பணியிடை நீக்கம் செய்து மின்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் படிக்க: திருச்சி விமான நிலையத்தில் அதிர்ச்சி.. பயணி உடைமையில் நெளிந்த உயிரினம்.. டிஆர்ஐ அதிகாரிகள் ஷாக்!

Follow Us