AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Neeraj Yadav: தங்கம் வென்ற பாரா தடகள வீரர் நீரஜ் யாதவ் தற்கொலை.. ஊக்கமருந்து தடை காரணமா?

Neeraj Yadav Dies: இந்தியாவின் மூன்று முறை ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் யாதவ் தற்கொலை செய்துகொண்டார். டெல்லியில் சடலமாக மீட்கப்பட்ட அவர் விஷம் அருந்தி உயிரிழந்தது பிரேத பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. 2023 நவம்பரில் ஊக்கமருந்து பயன்படுத்தியதால் விதிக்கப்பட்ட 4 ஆண்டு தடையே அவரது மன அழுத்தத்திற்கும், இந்த துயர நிகழ்விற்கும் காரணமாக இருக்கலாம் என பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

Neeraj Yadav: தங்கம் வென்ற பாரா தடகள வீரர் நீரஜ் யாதவ் தற்கொலை.. ஊக்கமருந்து தடை காரணமா?
பாரா தடகள வீரர் நீரஜ் யாதவ்Image Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 28 Oct 2026 20:41 PM IST

இந்திய விளையாட்டு உலகம் தற்போது எதிர்பாராத சோகத்தை சந்தித்துள்ளது. அதன்படி, 3 முறை ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் யாதவ் தற்கொலை செய்துகொண்டார். இதன்போது, அவர் தனது குடியிருப்பில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். மேலும், நீரஜ் யாதவ் (Neeraj Yadav) விஷம் அருந்தியதால் உயிரிழந்தார் என்பது தெரியவந்துள்ளது. நீரஜ் யாதவ் தனது விளையாட்டு வாழ்க்கையில் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ச்சியாக 3 தங்கப் பதக்கங்களை வென்ற ஈட்டி எறிதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். நீரஜ் யாதவ் கடைசியாக கடந்த 2022ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டி எறிதல் F55 பிரிவில் தங்கம் (Gold Medal) வென்றார்.

ALSO READ: தங்கம் உட்பட ஹாட்ரிக் பதக்கம்: ரூ. 1.75 கோடி ஊக்கத்தொகையைப் பெறும் துளசிமதி முருகேசன்!

டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையின்படி, இன்று அதாவது 2026 அக்டோபர் 28ம் தேதி டெல்லியின் ஜிடிபி மருத்துவமனையில் நடத்தப்பட்ட அவரது பிரேத பரிசோதனையில், நீரஜ் யாதவ் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இந்தநேரத்தில், பாராலிம்பிக் சாம்பியன் சுமித் அன்டில் மற்றும் மற்றொரு மாற்றுத்திறனாளி வீரரான விபின் கசானா ஆகியோர் மருத்துவமனையில் இருந்தனர். நீரஜ் யாதவின் தற்கொலைக்கான காரணங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

பயிற்சியாளர் விளக்கம்:


இந்தியாவின் பாரா தடகள அணியின் தலைமைப் பயிற்சியாளர் எஸ். சத்யநாராயணா, ”நீரஜ் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக தனக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்தச் செய்தி மிகவும் துரதிர்ஷ்டவசமானது மற்றும் வருத்தமளிக்கிறது. 4 ஆண்டு காலத் தடையால் நீரஜ் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்றும் அவர் மேலும் கூறினார்.

4 ஆண்டுகளுக்குத் தடை:

2023 நவம்பரில், ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக நீரஜ் யாதவிற்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இந்த 4 ஆண்டுத் தடை 2027 ஆம் ஆண்டின் இறுதி வரை நீடிக்கும் எனத் திட்டமிடப்பட்டிருந்தது. இதன் காரணமாகவே அவரால் 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. இந்தத் தடை அவரை அடியோடு உலுக்கியிருக்கவும் வாய்ப்புள்ளது.

ALSO READ: பாரா ஆசிய விளையாட்டு: பதக்கங்களை குவித்த தமிழர்கள் – ஊக்கத்தொகை அறிவித்த முதல்வர் விஜய்

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நீரஜ் யாதவ், மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளப் போட்டிகளில் குறிப்பிடத்தக்க புகழைப் பெற்றுள்ளார். அவருக்கு 7 வயதில் போலியோ நோய் தாக்கியதால், பக்கவாதம் ஏற்பட்டது. இருந்தபோதிலும், விளையாட்டின் மீதான அவரது ஆர்வம் சற்றும் குறையவில்லை. நீரஜ் யாதவ் 2005 முதல் 2012 வரை சக்கர நாற்காலி டென்னிஸ் விளையாடிய பிறகு, மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளப் போட்டிகளுக்கு மாறினார்.

Follow Us