Asian Para Games 2026: தடைகளைத் தாண்டி தங்கம்.. உயரம் தாண்டுதலிலும் பதக்கத்தை தூக்கிய நிஷாத் குமார்!
Nishad Kumar Double Gold: இந்தியாவின் நிஷாத் குமார், 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் உயரம் தாண்டுதல் மற்றும் நீளம் தாண்டுதல் என இரண்டு போட்டிகளிலும் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார். உயரம் தாண்டுதலில் 2.04 மீ தாண்டி புதிய சாதனை படைத்த நிஷாத், ஒரே ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு தங்கம் வென்ற மூன்றாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
இந்தியாவின் நிஷாத் குமார், 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் (Asian Para Games 2026) இன்று அதாவது 2026 அக்டோபர் 20ம் தேதி வரலாறு படைத்தார். 2026 ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் நிஷாத் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். முன்னதாக, நிஷாத் குமார் (Nishad Kumar) 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் நீளம் தாண்டுதல் போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், ஒரே ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் 2 தங்கப் பதக்கங்களை வென்ற மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை நிஷாத் குமார் பெறுகிறார்.
2026 அக்டோபர் 20ம் தேதியான இன்று நடைபெற்ற ஆடவர் உயரம் தாண்டுதல் T47 போட்டியில் நிஷாத் குமார் புதிய சாதனை படைத்து முதலிடம் பிடித்தார். இதன் மூலம், ஒரே ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை நிஷாத் குமார் பெற்றார். இதற்கு முன்னர், நேற்று அதாவது 2026 அக்டோபர் 19ம் தேதி நடைபெற்ற நீளம் தாண்டுதல் T47 போட்டியில் நிஷாத் குமார் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.




2 தங்க பதக்கம்:
SOARING TO NEW HEIGHTS! 🥇🇮🇳
Heartiest congratulations to TOPS athlete Nishad Kumar on clinching his second Gold of the Asian Para Games 2026! Clearing a phenomenal 2.04m in the Men’s High Jump T47, he sets a New Games Record and makes the entire nation immensely proud.
#Cheer4Bharat #AsianParaGames2026
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) October 20, 2026
நிஷாத் உயரம் தாண்டுதலில் 2.04 மீட்டருக்கும் மேல் தாண்டி புதிய விளையாட்டு சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றார். சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற கடந்த ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், அங்குர் தாமா (ஆண்கள் 5000மீ T11 மற்றும் 1500மீ T11) மற்றும் கைகள் இல்லாத வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி (மகளிர் தனிநபர் காம்பவுண்ட் ஓபன் மற்றும் கலப்பு அணி காம்பவுண்ட் ஓபன்) ஆகியோர் தலா 2 தங்கப் பதக்கங்களை வென்றனர். T47 பிரிவு என்பது மேல் உறுப்புக் குறைபாடுள்ள விளையாட்டு வீரர்களுக்கானது.
தங்கப் பதக்கம் வென்ற பிறகு, நிஷாத் குமார் 2.06 மீட்டர் உயரத்தைத் தாண்டவும் முயற்சித்தார். ஆனால், அதில் வெற்றியை எட்டவில்லை. இருப்பினும், நிஷாத் குமார் சாதனை படைத்த 2.04 மீட்டர் தாண்டுதல், அவருக்கு முதலிடத்தைப் பெற்றுத் தந்தது. உஸ்பெகிஸ்தானின் முகமது அப்துல்லோ துர்சுன்ஜோனோவ் 1.94 மீட்டர் தாண்டி வெள்ளிப் பதக்கத்தையும், தாய்லாந்தின் அங்கர்ன் சனபுன் 1.75 மீட்டர் தாண்டி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
நிஷாத் குமார் 6 வயதாக இருந்தபோது அவரது வலது கை துண்டிக்கப்பட்டது. இந்தத் துயரம் அவரது குடும்பத்தை நிலைகுலையச் செய்தது, ஆனால் நிஷாத் தனது உடல் குறைபாட்டைத் தனது கனவை நிறைவேற்றி தங்கப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமையையும் சேர்த்தார்.